தமிழினத்தின் தலைமைக் கவிஞன்!

வி.சி.வில்வம் தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர் பாரதியார், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன், சிறந்த முதல்வர் ராஜாஜி‌‌, சிறந்த குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன்… இப்படி ஒவ்வொரு துறையிலும் அறிவாளிகளாக இருந்தவர்கள் அக்கிரகாரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே என்கிற “விஷமப்” பிரச்சாரம் இங்கு வேரூன்றப்பட்டுள்ளது. இந்த மண்ணிற்கும், இவர்களுக்கும் தொடர்பில்லை என வரலாறு தெளிவாகச் சொல்கிறது. மனிதர்கள் புலம் பெயர்ந்து வாழ்வது இயற்கையான ஒன்றே‌! எனினும் வசிக்கிற நாட்டிற்கு நம்பிக்கையோடும், நாணயத் தோடும், அன்போடும், பிரியத்தோடும் இருப்பவர்களே மனிதர்கள்! ஆனால் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (120) – தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களும்…

நேயன் பழமையான தமிழ் இலக்கியங்கள், வேதங்களைப் போற்றுகின்றன; வேதம், பண்டைய தமிழர் வாழ்க்கையில் ஆதார அச்சாக இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். 19ஆம் நூற்றாண்டில், தமிழர்களுக்குத் தனி அடையாளம் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் புகுத்திய ஆரிய-_திராவிட இனவாதத்தைச் சில தமிழறிஞர்களும் ஆராயாமல் ஏற்றார்கள். இப்பெரியோரின் தமிழ்ப்பற்று குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆனால், இவர்களிடம் சமஸ்கிருத வெறுப்புணர்ச்சி உருவாகியிருந்தது. அது, ஆரியர்களின் மொழி. இங்குள்ள பிராமணர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள். முதன்முதலாக, திராவிடமொழிக் குடும்பம் தனித்தன்மை கொண்டது என்பதைச்சொன்னவர் எல்லிஸ்தான். அதை அவர் […]

மேலும்....

கட்டுரை – மத நம்பிக்கையால் அழிவுறும் இயற்கைச் சூழலும், சமநிலையும்!

இளஞ்செழியன் இயற்கை சார்ந்த நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான காரணத்தை ஏற்பதைவிட, மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே காரணத்தை தேட முயற்சி அதிகம் நடைபெறுகிறது. அந்த மத நம்பிக்கையும்கூட உலகில் உள்ள மற்ற உயிர்களைவிட, மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த உலகத்தில் உள்ள சுமார் 84 விழுக்காடு மக்கள் நாம் வாழும் இந்த பூமிப் பந்தினை தம் மதம் சார்ந்த கடவுள்களே படைத்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நம்பிக்கைகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், […]

மேலும்....

சிறுகதை – நோய் நாடி….

ஆறு. கலைச்செல்வன் பேருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது. சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்ற கலிவரதன் இன்னும் வரவில்லை. சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த அவரது நண்பர் மணிவண்ணன் வெளியே எட்டிப் பார்த்து கலிவரதனைத் தேடினார். ஆனால் கலிவரதன் வந்தபாடில்லை. நடத்துநர் விசிலடித்து பேருந்தைக் கிளப்பினார். ‘‘சார், சார் கொஞ்சம் இருங்க சார். என்னோடு வந்தவர் சிறுநீர் கழிக்கப் போயிருக்கார். இப்ப வந்திடுவார். ஒரு நிமிஷம் பொறுங்க சார்’’ என்று கேட்டுக்கொண்டார் மணிவண்ணன். ‘‘எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்க முடியும்? […]

மேலும்....

சிலம்பாட்டத்தில் சாதிக்கும் சிறுமி!

குழந்தைப் பருவத்தில் எந்தச் சூழலில் வளர்கின்றோமோ, அதைப் போலவே எதிர்காலம் அமையும். வளரும் சூழ்நிலைதான் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், கற்கும் பள்ளிச் சூழல், வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்று பல காரணங்கள் ஒருவரது ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. தன் தாத்தா பாட்டி இருவரும் சிலம்பாட்ட பயிற்சி எடுப்பதைப் பார்த்த இளம் வீராங்கனை நட்சத்திராவுக்கு சிலம்பாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் நட்சத்திரா குறித்து அவரின் தாய் நர்மதா, “என் அப்பா […]

மேலும்....