முனைவர் மு. வரதராசனார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனை

‘‘முதுநிலைத் தேர்வுக்காக முயன்று படித்து வந்தேன். தேர்வுக்குக் கட்டணம் செலுத்தப் புறப்பட்ட நேரம் இராகு காலமாக இருந்தது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்து புறப்படும்போது முடிதிருத்தும் தொழிலாளி எதிரே வந்தார். அப்போது உறவினர் ஒருவர், ‘‘சகுனம் சரியில்லை தம்பி! மேலும் இப்போது இராகு காலம் வேறு. அது கழிந்த பின் புறப்படு’’ என்றார். “எனது முயற்சியில் குறையில்லை என்றால் நான் தேர்ச்சி பெறுவது உறுதி. அப்படி நான் தேர்ச்சி பெறாமல் போனால் […]

மேலும்....

108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தோழர் வீரலட்சுமி. இவர் சில மலைக் கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் ஓட்டுநராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் (எமர்ஜென்சி பைலட்) முதல் பெண் பைலட் தோழர் வீரலட்சுமி ஆவார். தோழர் வீரலட்சுமி திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். இவரின் கணவரும் கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சுயமாகச் […]

மேலும்....

பரிணாமக் கோட்பாட்டையே பாடத்திட்டத்தில் நீக்குவதா?பாசிச பா.ஜ.க. பாதையில் ncert! – மஞ்சை வசந்தன்

சார்லஸ் டார்வின் மனிதன் விலங்கோடு விலங்காய் வாழ்ந்த காலத்தில் இயற்கைத் தாக்குதல்களாக கண்டு அஞ்சினான். தொடக்க காலத்தில் அவற்றிடமிருந்து தப்பிக்க ஓடி ஒளிந்தவன் பின்னாளில் அவற்றை வணங்கி தப்பிக்க இயன்றான். உலக அமைப்பை, உடல் அமைப்பைப் பார்த்து இதையெல்லாம் ஒருவர் படைத்திருக்க வேண்டும் என்று எண்ணினான். நம்பினான். இந்த உலகையும், உயிரினங்களையும் படைத்தவர் கடவுள் என்று கருதினான். அக்கடவுள் சார்ந்த மதங்கள் எல்லாரும் இவ்வுலகும், உயிரினங்களும் கடவுளாலே படைக்கப்பட்டன என்று போதித்தன; மக்களை நம்பச் செய்தன. சில […]

மேலும்....

மே தினம் என்றால் என்ன? – தந்தை பெரியார்

தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா […]

மேலும்....

கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!

கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பணி, உரிமைகள், சலுகைகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கையை ஜனநாயகப் பண்போடு நிறுத்தி வைத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரம் உள்ளிட்ட, ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு என்று இருந்த உரிமைகள், சலுகைகள் பறிப்பு உள்ளிட்ட […]

மேலும்....