அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (318)

தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்த தோழர்களின் பாசம்! – கி. வீரமணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.11.2003 அன்று திங்கள் காலை 10 மணிக்கு எமது தலைமையில் நடைபெற்றது. 8.11.2003 சனியன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றைத் தவிர மற்றத் தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வரவேற்று, கழக அமைப்பில் செய்யப்பட்ட மாறுதல்களையும் ஒருமனதாக ஏற்றுச் செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. […]

மேலும்....

எச்சரிக்கைத் தொடர் – ஊகவணிகத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!

(யூதர்கள் இரகசிய அறிக்கை) மனித மனத்தில் பூர்த்தியடையாத பொருள் ஆசை, பண ஆசை, எண்ணிலடங்காத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்களை விலைக்கு வாங்கி வருகிறோம். இவை ஒவ்வொன்றும் அவர்களின் பலவீனம். இந்தப் பலவீனங்களில் கை வைத்தாலே போதும், நமக்கு எதிரான எந்த ஒரு முயற்சியையும் நாம் முடக்கிவிடலாம். பதவிகளின் பின்னால் அலையும் அதிகார ஆசை பிடித்தவர்கள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் பொருட்டு, அவர்களை பல அணிகளாகப் பிரித்து மோதவிட்டிருக்கிறோம். அவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கசாப்புக் கடைக்காரனுக்கு ஷீவகாருண்ய விருது! 1. கே: ஒன்றிய அரசின் பழிவாங்கும், அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதால், அனைத்துக் கட்சிகளும் பொது மக்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டியது கட்டாயம்தானே? – ரமணி, காஞ்சிபுரம். ப :  பொதுத் தேர்தல் விரைவில் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் வருமோ என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து ஆயத்தமாகி வரும் நிலையில், அதற்குரிய காலம் கனிகிறபோது மக்கள் தெருவுக்கு வரும் நிலையும் வருவது  உறுதி! 2. கே: அமெரிக்காவின் […]

மேலும்....

வரலாறு படைத்தவர் காமராசர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

படிக்காத மேதையெனக் காம ராசர் பாராட்டப் படுகின்றார்! என்றும் வாழ்வில் நடிக்காமல் எளிமைக்கோர் எடுத்துக் காட்டாய் நலத்திட்டம் பற்பலவும் நாளும் சேர்த்தார்! துடிப்புடனே விடுதலைப்போ ராட்டம் தன்னில் துணிவாக ஈடுபட்டார்! பள்ளி தன்னில் படிக்கின்ற பிள்ளைகட்குப் பகல்நே ரத்தில் பாங்குறவே சத்துணவு வழங்கச் செய்தார்! சட்டமன்றம் நாடாளு மன்றம் தன்னில் சால்புறவே உறுப்பினராய்ப் பெருமை சேர்த்தார்! ஒட்பமுறப் பொதுத்தொண்டில் அறுப தாண்டாய் உழைப்பாலே வரலாறு படைத்தார்; அந்நாள் பெட்புறவே தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்! பேராயக் கட்சிக்குத் தலைமை […]

மேலும்....

சகலவித இனபேதங்களையும் ஒழிப்பது பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை – விழிப்புணர்வு தொடர்

இவ்வுடன்படிக்கை அய்.நா. பொதுச்சபையில் 21.12.1965 அன்று நிறைவேற்றப்பட்டு 4.1.1969 முதல் நடைமுறைக்கு வந்தது. இதோ, உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள்-மானிடர் அனைவரிலும் உள்ளார்ந்து அமைந்துள்ள சமத்துவம், மாண்பு ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் அய்.நா. அமைப்புச்சட்டம் அமைந்துள்ளது என்பதையும், உறுப்பு நாடுகள் தனித்தனியேயும் தம்முள் இணைந்தும் அய்.நா. கூட்டுறவுடன் இன, மத, பால், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதை உலகமே ஏற்கச் செய்வதற்கான முயற்சிகளில், அய்.நா.வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக அந்த […]

மேலும்....