வாருங்கள்! மகிழ்ச்சியைத் தேடுவோம்!! – வி.சி. வில்வம்

“மகிழ்ச்சியாக வாழ்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நாமோ மற்றவர் களைவிட மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறோம்”, என்கிறது ஒரு பொன்மொழி. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடுகளை ஆண்டுதோறும் பட்டியல் இடுவார்கள். இந்த மகிழ்ச்சியை எதன் மூலம் பெறுகிறார்கள் என்பதை அறியவேண்டும். அதே நேரம் இந்தப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது. கல்வி, வறுமை, பிற்போக்குத்தனம் என நம்மால் விமர்சிக்கப்படும் நாடுகள் கூட, நம்மைவிட பல படிகள் முன்னால் இருக்கின்றன. மகிழ்ச்சி என்பது இருவகைகளில் கிடைக்கும்! ஒன்று, தனிப்பட்ட […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (119) சிவன் வேறு; – ருத்திரன் வேறு!

நேயன் வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் மனித இனத்தவன் என்பதை வேதமே உறுதி செய்கிறது. 1:64 முழுவதும் மருத்துக்களை நோக்கிப் பாடப்படும் பாடல்கள் வருகின்றன. அதில்வரும் 10ஆவது பாடல், ‘‘மனிதர்களின் தலைவர்களுமான மருத்துக்கள்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆக மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள் என்பது உறுதியாகிறது. ரிக்வேதம் 2ஆம் மண்டலம் 33 ஆவது அத்தியாயம் முதல் பாடல் ருத்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘மருத்துக்களின் தந்தையே!’’ என்று அழைக்கிறது. அப்படியென்றால் என்ன பொருள்? மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள். அந்த மருத்துக்களின் தந்தை […]

மேலும்....

கட்டுரை – சமூக நீதிக் களத்தின் சரித்திர நாயகர்!

வை. கலையரசன் சமூக நீதி வரலாற்றில் சாகா இடம் பெற்ற சரித்திர நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் நினைவு நாள் ஏப்ரல், 13. இந்தியச் சமூகச்சூழலில் ஜாதி என்னும் பெரும் சூழ்ச்சியால் மண்ணின் மைந்தர்களை வஞ்சித்துவரும் வந்தேறிப் பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு, அனைத்து பார்ப்பனரல்லாத மக்களையும் ஒடுக்கினர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, சில பகுதிகளில் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், விடுதலை பெற்ற இந்தியக் குடியரசில் அவர்களது உரிமைகள் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – கல்வியில் இடைநிற்றல் கட்டாயம் தடுக்கப்படவேண்டும்!

மஞ்சை வசந்தன் கல்வியில் இடைநிற்றல் என்பது விதிவிலக்காக இருந்த நிலை மாறி, தற்போது அதிக அளவில் வளர்ந்து வரும் போக்கு அனைவரும் கவலைகொள்ள வேண்டிய ஒரு சமுதாயச் சிக்கல் என்பதை அரசும், பெற்றோரும், மாணவர்களும் புரிந்துகொண்டு அதைத் தடுக்கும் வழிகளைக் காணவேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. இடைநிற்றல் தொடக்கக் கல்வி அளவிலும் நிகழ்கிறது, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவிலும் நிகழ்கிறது, கல்லூரிக் கல்வியிலும் அது தொடர்கிறது. தொடக்கக் கல்வி அளவில் அது நிகழ்ந்தால் பிள்ளைகளின் அறியாமை என்று […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் – டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்

தந்தை பெரியார் அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் பெருமையாகப் பாராட்டப்பட்ட காந்தியாரையே பிய்த்துத் தள்ளியவர்! எப்படி ஜின்னா அவர்கள் நடந்து கொண்டாரோ அது போல மதத்துறையினை சின்னாபின்னப்படுத்தியவர். காந்தியாரால் சமுதாயத் துறைக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. கேடுகள் தான் வளர்ந்து இருக்கின்றது என்று புத்தகம் எழுதியவர். இவர் ராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்தியவர். பார்ப்பனர்களால் பெருமையாகக் கொண்டாடப்படும் கீதையை பைத்தியக்காரன் […]

மேலும்....