கட்டுரை – பிராமணியமும் பவுத்தத்தின் வீழ்ச்சியும்

-தஞ்சை பெ.மருதவாணன் ஆரியத்தின் எதிர்ப்புரட்சியாக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பல துணைக் காரணங்கள் இருந்த போதிலும் முதன்மையான காரணம் சனாதன பிராமணியத்தின் சூழ்ச்சியே என்பது வரலாறு கூறும் உண்மை. 1.பவுத்தத்தை வீழ்த்துவதற்குப் பிராமணியம் கடைப்பிடித்த செயல்பாடுகளில் ஒன்றாக அணைத்தழிக்கும் சூழ்ச்சியை விளக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமெரிக்கப் பேராசிரியர் ஜோஷி என்பவர் எழுதிய ‘புத்தரை உற்றுப் பார்க்கிறேன்’ என்ற நூலிலிருந்து கீழ்க்கண்ட வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறார்.  அதன்படி, ஆரியம் பின்பற்றிய […]

மேலும்....

கவிதை – அறியாமை இருளகற்றும் பரிதி அய்யா! – முனைவர் கடவூர் மணிமாறன்

-முனைவர் கடவூர் மணிமாறன் இல்லாத கடவுளரை இருப்பதாக ஏமாற்றிப் பிழைக்கின்ற எத்தர் கூட்டம் பொல்லாத கதையளந்து வேதம் என்றும் பொய்புரட்டு மனுதருமம் என்றும் கூறி நல்லமனம் தனில்நஞ்சைக் கலந்தார்; நம்மை நாய்போலும் அவர்பின்னால் அலைய வைத்தார்; செல்லரித்த ஏடானார் தமிழி னத்தார்! சீர்திருத்தம் பகுத்தறிவை மறந்தே போனார்! வெண்தாடிப் பெரியாரோ வெகுண்டெ ழுந்தே வீழ்ந்திட்ட தமிழினத்தை மீட்க வந்தார்; உண்மையினை வரலாற்றை உரக்கக் கூறி உணர்வூட்டி எரிமலையாய்ப் பொங்கச் செய்தார்! மண்மீதில் பெரும்புரட்சி விளைத்தார்! பொல்லா மதம்பிடித்தோர் […]

மேலும்....

எச்சரிக்கைத் தொடர் – மக்களின் கவனத்தை அரசியலிலிருந்து திருப்ப வேண்டும்!

(யூதர்கள் இரகசிய அறிக்கை) “நம்முடைய நோக்கங்கள் நிறைவேறும் பொருட்டு, ஊடகங்கள் என்னும் படையை வழிநடத்த மிகுந்த அக்கறையும், நுணுக்கமான சிரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் தலைமைப் பத்திரிகை அலுவலகம் ஒன்றை நிறுவி, அதில் இலக்கியச் சந்திப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சந்திப்பின் போது, மற்ற பத்திரிகை ஆசிரியர்கள் அறியா வண்ணம், அவர்களிடையே ஊடுருவியிருக்கும் நமது ஏஜெண்டுகள், அன்றைய நாளில் என்னனென்ன விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை மறைமுக சங்கேத மொழியால் உணர்த்துவார்கள். […]

மேலும்....

விழிப்புணர்வு – இந்திய அரசமைப்பில் பொறிக்கப்பட்டமனித உரிமைகள்

அந்நியத் தளையிலிருந்து விடுபட நடந்த போராட்டத்தின்போது இந்திய மன்னர்களுக்கு எதிரான போராட்டமும் அதில் அடங்கியிருந்தது. அப்போது  இந்திய மக்கள் விடுதலை பெற்ற இந்தியா பற்றி சில தீர்க்க தரிசனப் பார்வைகள் கொண்டிருந்தனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய தேசிய காங்கிரசின் தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களிலும் அந்த தரிசனம் தன்னை பளீரென வெளிப்படுத்தியது. வயதுற்றோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மிளிரும் அரசியலமைப்பைப் படைப்பது, சமத்துவம் – சமூகநீதி ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தையும் […]

மேலும்....

கட்டுரை – பயிற்சிக் களப் பாடம்

– முனைவர் வா.நேரு உண்மை வாசகர்களுக்குத் தந்தை பெரியாரின் 145-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்புகளால் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு போற்று வகையில், ஆகஸ்ட் 20ஆம் நாளை அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நாளாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம், கல்லூரி, பள்ளிகளில் பிரச்சாரம், கருத்தரங்கம், […]

மேலும்....