ராஜாஜியின் கைங்கர்யம்

‘ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை 1943 ஆகஸ்ட் மாதமே பெற்றுத் தந்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் அறிவோம். அவர் இன்னுமோர் அரிய செயலை செய்திருந்தார். ஆங்கிலேயே வைசிராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த நாட்டின் நிலைமையை விளக்கி, இந்தியாவில் இருக்கிற பட்டியலின மக்களில் சிறந்த மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்கவேண்டும் என்றும், அதற்கான செலவை அரசே ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது, […]

மேலும்....

மொழி என்பது போர்க்கருவி! காலத்திற்கேற்ப மாற்றம் கட்டாயம்! – மஞ்சை வசந்தன்

மொழி என்பது ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவியாய்த் தொடங்கி, காலப்போக்கில் கருத்துக்கருவூலமாய், கருத்து பரப்புக் கருவியாய் வளர்க்கப்பட்டது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கருத்தேற்றங்களும், படைப்பாக்கங்களும் மொழியுள் புகுத்தப்பட்டன. இவை அடுத்து வரும் தலைமுறைக்கு காலக்கண்ணாடியாய் மாறின. மொழியென்று பார்க்கும்போது, மனித இனத்தின் தொல்குடிகளில் தமிழ் மக்கள் பேசிய தமிழே தொன்மையானது, முதலானது ஆகும் என்பது உலகில் உள்ள அனைத்து மொழி அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. காலத்தால் மூத்தது என்பது போல கருத்து வளத்தாலும், வாழ்வியல் தெளிவாலும் நெறியாலும் […]

மேலும்....

சமதர்மம் – தந்தை பெரியார்

சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் […]

மேலும்....

உயர்நீதிமன்ற ஆணைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்க!

– தலையங்கம் ‘‘பார்ப்பனர்களைப்பற்றியே அதிகம் பேசுகிறீர்களே, இப்போதெல்லாம் அவர்கள் திருந்திவிட்டார்கள்; மாறிவிட்டார்கள்’’ என்று சில அரைவேக்காட்டு, முழுக்கால் சட்டை அணிந்துள்ள, 69 சதவிகித இட ஒதுக்கீட்டால் பணியில் சேர்ந்து, கைநிறைய சம்பளம் வாங்கும், ‘‘சுயநல வாழ்வையே சொகுசு வாழ்க்கையாக’’ அனுபவித்துவரும் விபீடணத் தமிழர்கள் -‘அண்ணாமலை பிராண்டுகள்’ பேசிவருவது கண்கூடு. அவர்களுக்கு சிலர் எதார்த்தமான நடப்புகளைச் சுட்டிக்காட்டிடுவதும், ‘‘திருந்தாத ஜென்மங்களே, நீங்கள் இருந்தென்ன லாபம்?’’ என்று கேள்வி கேட்டு, சொடுக்குவதற்கும், அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்றே, […]

மேலும்....

டாக்டர்.கலைஞர் நினைவு நாள் – 07.08.2018

டாக்டர் கலைஞர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றிச் சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து, திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் கலைஞர் செய்து வருகின்ற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும் படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார். – தந்தை பெரியார்

மேலும்....