உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம்!

திராவிட இயக்க வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற கொள்கைகளை இசை, நாடகம், மேடைப் பேச்சு ஆகிய தளங்கள் மூலம் பரப்புவதில் பழைய பஞ்சாங்கவாதிகள், ஜாதி வெறியர்கள், மேல்தட்டு மிராசுகள் போன்றோரின் எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சாது முனைந்து செயலாற்றிய செயல்வீரர்தான் உடையார்பாளையம் வேலாயுதம்.

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (110)

வேதம், வருணம் பற்றி அம்பேத்கர் நேயன் வேதம், வருணம் பற்றி குறிப்பிட வந்த அம்பேத்கர், இவற்றிற்குக் காரணமான ஆரியர்-கள் யார் என்பதை ஆராய்கிறார். முதலில் அதுபற்றி திலகர் கருத்தை எடுத்துக் கூறுகிறார். “ஆரிய இனத்தின் பூர்விகத் தாயகம் ஆர்க்டிக் பிராந்தியம் என்று திலகர் கருத்துத் தெரிவித்துள¢ளார். அவரது கோட்பாட்டை அவருடைய சொற்களிலேயே சுருக்கமாகக் கூறலாம். வடதுருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிலவும் வானூல் மற்றும் தட்ப வெப்ப நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர் தொடங்குகிறார்: “வேதங்களின் வருணனை அல்லது […]

மேலும்....

கட்டுரை குழந்தைத் திருமண குற்றவாளிகள்!

சிகரம் சிதம்பரம் தீட்சதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் இன்றளவும் நடப்பது மாபெரும் குற்றச் செயல். அதன்மீது நடவடிக்கை எடுத்தால் சாலை மறியல் செய்து தங்கள் குற்றச் செயலை மேலும் கூட்டிக்கொண்டே செல்கின்றனர் தீட்சதர்கள். இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்லர்; இவர்களின் செயல்களை சரியென்று நியாயப்படுத்தும் காஞ்சிபுரத்து சங்கராச்சாரியும் குற்றவாளியே! காஞ்சிபுரத்து, காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரன் தனது ‘‘தெய்வத்தின் குரல்’’ என்ற நூலில், “சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் […]

மேலும்....

கட்டுரை: திருவண்ணாமலை தீபம் எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?

மஞ்சை வசந்தன் திருவண்ணாமலை என்றாலே தீபம் எல்லோர் நினைவிற்கும் வரும். அந்தத் தீபத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலை யுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவில் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றனர் என்பதே அப்புராணம். அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாய்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் […]

மேலும்....

கட்டுரை : பெயருக்கு வைப்பதல்ல பெயர்!

வி.சி.வில்வம் “உன் நண்பர் யாரென்று சொல்; நீ யாரென்று கூறுகிறேன்!” என்கிறது ஒரு பொன்மொழி! அதுபோலவே ஒரு மனிதரின் பெயரை வைத்தே அவர்தம் பெற்றோரின் சுயமரியாதை உணர்ச்சியை, பகுத்தறிவுச் சிந்தனையை அறியமுடியும்! நல்ல பெயரை, நம் மொழியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திராவிடர் இயக்கம் பெரும் முயற்சி கொண்டு, வெற்றியும் கண்டது! நாம் விரும்பிய பெயரை நாம் வைத்துக் கொள்ள முடியாதா? இதற்கும் திராவிடர் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பார்கள்? பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி […]

மேலும்....