பகுத்தறிவு : தீபாவளி

உண்மையும் புரட்டும்! மஞ்சை வசந்தன் ஆரியர்கள் சமண, புத்த ஆலயங்களை இந்துக் கடவுள் ஆலயங்களாக மாற்றியது போல, அவர்களின் விழாக்களையும் இந்துப் பண்டிகைகளாக மாற்றினர். அதற்கேற்ப புராணக் கதைகளைப் புனைந்தனர். இதை நாம் மட்டும் சொல்லவில்லை, அறிஞர் பெருமக்களே அழுத்திக் கூறியுள்ளனர். சமண சமயப் பண்டிகையே தீபாவளி தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண் மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். […]

மேலும்....

பெண்ணால் முடியும்: 94 வயதில் தங்கப்பதக்கம்!

தள்ளாத இந்த 94 வயதிலும் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு ஒரு தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கங்களையும் தட்டித் தூக்கியிருக்கிறார். அதுவும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் பக்வானிதேவி இந்தச் சாதனையை அநாயாசமாகப் படைத்-திருக்-கிறார். ஃபின்லாந்து நாட்டில் ‘தம்பேர்’ என்ற இடத்தில் உலக தடகள மாஸ்டர்ஸ் போட்டிகள் நடைபெற்றன. அதில் 100 மீட்டர் ஸ்பிரின்ட் பந்தயத்தில் 24.74 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார். அதுமட்டுமா! குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய இரண்டு போட்டிகளிலும் […]

மேலும்....

கட்டுரை: பெரியாரும் திராவிட நாடும்

ஆ.வ.ப.ஆசைத்தம்பி தொகுத்தது திராவிடர்களின், தமிழர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள விரும்பு-கிறவர்கள்; முதலாவது திராவிட நாடு ஒரு தனி நாடு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். திராவிட நாட்டின் எல்லைகளைக் குறிப்பது கஷ்டமில்லை. இயற்கை திராவிட நாட்டைச் சுற்றி மூன்று பக்கங்களில் சமுத்திரங்களையும் ஒருபுறம் விந்தியமலையையும் நிறுத்தி வைத்திருக்கிறது. திராவிட நாடு தெளிவாக ஒரு தனிப்பட்ட சமூகத்தையுடையது. திராவிட மொழியான தமிழ்மொழி எத்தனை பிரிவாய்ப் பிரிந்திருந்தும் ஆரியரோடு சம்பந்தப்படாமல் ஒரு தனிப்பட்ட இனமாக இருப்பதற்கு தமிழ் மொழியின் தன்மைக்கு நான் வந்தனம் செலுத்துகிறேன். […]

மேலும்....

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்

(World Patient Safety Day) உலக சுகாதார நிறுவனம் (WHO) பாதுகாப்பற்ற மருத்துவப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளின் (Antibiotics) முறையற்ற உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதே முதன்மையானதாகும். 2019 கொரோனா காலத்தில் மட்டும் இந்தியர்கள் ரூபாய் 500 கோடி மதிப்பிலான நோய் எதிர்ப்பு மாத்திரைகளை உண்டிருக்கின்றனர். இதில் பாதியளவு அங்கீகரிக்கப்படாதவை என லான்சட் நிறுவனம் கூறுகிறது. இந்த மருந்துகள் தாராளமாகக் கிடைப்பதும், தானே […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்!

ஆர்.எஸ்.எஸ்ன் வெறுப்பு அரசியல் கே: ‘மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு’ என்று மோகன் பகவத் கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன? – கா.முத்துராமன், தாம்பரம் ப: வேண்டுமென்றே சிறுபான்மையினரை _ குறிப்பாக முஸ்லிம்களை மனதிற்கொண்டு திட்டமிட்டே இந்த திடீர்க் கவலை ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு வந்தது போலும்! மக்கள் தொகைக் கட்டுப்பாடு எந்த மதத்தினரையும் தாண்டித்தான் சட்டம் செய்யப்பட வேண்டும். செய்யப்படுகிறது என்பதே யதார்த்தமாகும். கே: ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதித்திட்டங்கள், திரிபு வேலைகள், ஏமாற்றுகள் குறித்து இந்திய […]

மேலும்....