காலத்தால் அழியா கலைவாணர்…

“எவனொருவன் தன்னலமில்லாமல்,பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்” என்று தந்தை பெரியாராலும், “சமூக விஞ்ஞானி” என்று அறிஞர் அண்ணாவாலும், கலையுலகம் கண்டெடுத்த முத்து, நல் உழைப்பால் உயர்ந்த உத்தமர், கலையுலகிற்கு குளிர் தருவாக அவர் இருந்தார். ஏழை எளிவர்களின் பக்கம் அவரது கொடைக்கரம் நீண்டு கொண்டே இருந்தது. அவரில்லாமல் படங்கள் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாயிருந்தது என்று டாக்டர் கலைஞராலும் பாராட்டப்பட்டவர்தான். […]

மேலும்....

மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் 1902ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 26 ஆம் நாள் இரங்கூனில் பிறந்தார். இவர் பர்மாவிலே கல்வி கற்றுபின் மேற் படிப்புக்காக சென்னை வந்தார். இவருடைய குடும்பம் செல்வந்தர் குடும்பம். தமிழ்நாட்டில் அவருடைய குடும்பம்தான் முதன்முதலில் கப்பலோட்டி யது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சீர்திருத்தக் கருத்துகளுக்காகவும் சுயமரி யாதை இயக்கத்தோடு அணுக்கமான உறவில் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஆதி திராவிட மாநாடுகள், தாழ்த்தப்பட்டோருக்கான இயக்கங்களையும் கட்டி இருக்கிறார். 1935இல் அம்பேத்கர் மதமாற்றத்தைப் பற்றிப் பேசுகின்றபோது […]

மேலும்....

மருத்துவம் : குடும்ப நலம் (Family Welfare)

– மரு.இரா. கவுதமன் ‘‘கு டும்ப நலம்’’ என்பது குடும்பத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ‘‘பெண்களின் நலமே’’ என்பதில் இரு வேறு வேறு கருத்துகள் இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது மட்டுமன்றி, நல்ல மனவளத் துடன் இருக்கவேண்டும். எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பமே படித்ததுபோல் ஆகுமோ, அதேபோல் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் நல்ல உடல் நலத்தோடு இருப்பா ரெனில் அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல […]

மேலும்....

சிறுகதை: சாரதாவின் முடிவு…

ஆறு.கலைச்செல்வன் சிந்தனைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும்போது அவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். ஓய்வு பெறும் நாளன்று கூட, அவர் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்றோடு தனது பணி முடிவடைகிறதே என்ற கவலை அவருக்குச் சிறிதளவும் இல்லை. அவரை ஒத்த தலைமை ஆசிரியர்கள் பலர் எப்போது ஓய்வு பெறுவோம் என்று நாளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் இவர்களைச் சமாளிப்பது ஒரு புறம் இருந்தாலும், தனது உயர் அலுவலர்களைச் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

 தஞ்சை பெ. மருதவாணன் தந்தை பெரியாரின் மத எதிர்ப்பு முழக்கம்! “குடிஅரசு’’ இதழுக்குத் தடை விதிக்கப்பட்டி-ருந்த இடைக்காலத்தில் “புரட்சி’’ என்ற பெயரில் ஓர் இதழைத் தந்தை பெரியார் நடத்தினார். “புரட்சி’’யின் தொடக்க இதழில் (26.11.1933) தந்தை பெரியார் எழுத்து வடிவில் எழுப்பிய மதஎதிர்ப்பு முழக்கங்கள் இவை! மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி! “மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி! மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி! மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி! மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை! […]

மேலும்....