அய்யாவின் அடிச்சுவட்டில்… தென்மாவட்ட தி.க. கொள்கை விளக்க மாநாடு

கி.வீரமணி திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் தொண்டரும் தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளரும் நீங்கா அன்பு கொண்டவருமான மறைந்த பே.தேவசகாயம் அவருக்கு மரியாதை செலுத்த 6.-6.-2001 அன்று மதியம் 1:30 மணியளவில் மதுரை சென்றேன். என்னுடன் பொருளாளர் கோ.சாமிதுரை என் வாழ்விணையர் திருமதி மோகனா ஆகியோரும் வந்திருந்தனர். நாங்கள் மறைந்த பெரியார் பெருந் தொண்டரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்த பின் அவரது துணைவியார், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். உரத்த நாட்டிற்கு அருகிலுள்ள […]

மேலும்....

கட்டுரை: குழந்தைகளைத் தத்தெடுப்பது எப்படி?

வி.சி.வில்வம் மனித வாழ்வில் குழந்தையின்மை என்பது பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட தம்பதியினரைக் குற்றவாளியாகக் கருதும் கொடுமையும் நிகழ்கிறது. திருமணமான ஒரே ஆண்டிற்குள் குழந்தை பிறக்காவிட்டால், ‘ஏன்? என்னாச்சு?’ என்கிற கேள்விகள் அல்லது தொந்தரவு அவர்களைச் சித்ரவதை செய்கின்றது. குழந்தையின்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இன்றைக்கு அறிவியல் வென்றெடுத்துள்ளது. அதையும் மீறி சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. இன்னமும் திருமணம் ஆகவில்லையா? என்பதும், ஆன பிறகு குழந்தை இல்லையா? என்கிற கேள்விகளும் இங்கே அநாகரிகமாக உலாவி […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: சனாதனம் தகர்த்து சனநாயகம் காப்பவர்!

மஞ்சை வசந்தன் திராவிடர்கள் (தமிழர்கள்) வாழ்ந்த நிலப்பகுதிக்குள் ஆரியர்கள்நுழைந்து பரவி, குழுக்களாக வாழ்ந்து வந்தபோதே ஆரியர்_ திராவிடர் போர், மோதல், எதிர்நிலை உருவாகிவிட்டது. ஆரியர்கள் திராவிடர்களோடு எதிர்நிலை யில் நின்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணன், அக்னி போன்றவற்றை பிரார்த் திப்பதே வேதங்கள். ஆக வேதம் உருவாக்கப் பட்டதே ஆரிய _ திராவிட மோதலின் விளைவுதான். ஆரியர்களுக்குத் தொடக்க காலத்தில் உருவ வழிபாடு இல்லை. இயற்கைச் சக்திகளை வழிபடுதல், பலியிடுதல், யாகங்கள் செய்தல் என்ற முறையிலே இருந்தனர். […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன் தந்தை பெரியார் தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னை யில் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக்கூடாது என்று கருதி அவரை கழகத் துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன். இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டது. அதாவது […]

மேலும்....

தலையங்கம்: தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்ற வினாக்களும் திருப்தி தரா ஒன்றிய அரசின் பதில்களும்

நமது அரசமைப்புச் சட்ட நெறிப்படி இது ஒரு “முழு இறையாண்மை படைத்த, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு’’ ஆகும். இறையாண்மையின் முழு இருப்பிடம் நாட்டு மக்கள்! மக்களேதான்! இந்த மக்களாட்சி முறையில் பொதுத் தேர்தல், மற்ற இடைத்தேர்தல் எல்லாம் அந்த ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்_ மக்கள் தீர்ப்புகள்மூலம். அவற்றை ஒழுங்குற நடத்திடவே இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற சுதந்திரமாக இயங்கவேண்டிய ஓர் அருமையான அமைப்பு. ஆனால், நடைமுறையில் காணும் காட்சிகளோ, அந்தத் தேர்தல் ஆணையத்தின் நியமனங்கள் அதன் சுதந்திரமான […]

மேலும்....