கவிதை : நீட்டைத் தடுப்போம்!

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் ‘நீட்’டை வலிந்து திணிக்கின்றார் – தமிழர்                நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறார்! வாட்டி வருத்த நினைக்கின்றார் – நல்                வாழ்வின் மேன்மை தடுக்கின்றார்!   முன்னர் நுழைந்த குலக்கல்வி – முக                மூடியை அணிந்து வருகிறது! என்றும் நஞ்சாம் மனுதருமம் – நம்                இனத்தை அழிக்கப் பாய்கிறது!   இட ஒதுக் கீட்டை எதிர்க்கின்றார் – இங்கே                ஏழைகள் படிப்பதை வெறுக்கின்றார்! மடமை நோயில் உழல்பவரோ […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : நாகம்மையாரும் வைக்கம் போராட்டமும்

(அன்னை நாகம்மையார் நினைவு நாள் 11.5.1933) 1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற, நாகம்மையார் தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் தமிழகத்துப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். வைக்கம் என்பது ஒன்றும் ஈரோட்டின் அருகே உள்ள ஊர் அல்ல. எர்ணாகுளம் வந்து வைக்கம் செல்ல வேண்டும். அன்றைய நாளில் இன்று போல் போக்குவரத்து வசதிகள் அவ்வளவு அதிகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கேரள மாநிலத்து வைக்கம் அந்நிய […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : நீட், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராய் நீண்ட பரப்புரைப் பயணம் ஏற்படுத்திய எழுச்சி!

மஞ்சை வசந்தன் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், ஏப்ரல் 3ஆம் நாள் நாகர்கோவிலில் தொடங்கியது நீண்ட பரப்புரைப் பயணம். 25.4.2022 அன்று சென்னையில் நிறைவு விழா கண்ட இப்பரப்புரைப் பயணம், 21 நாள்கள் என்ற நீண்ட பெரும்பயணம். 4,700 கி.மீ. பயண தூரம்; 40 இடங்களில் பொதுக்-கூட்டங்கள்; இலட்சக்கணக்கான பொதுமக்கள் சந்திப்பு என்று சரித்திர சாதனை கொண்டது இப்பயணம். ஒன்றுக்கும் அசையாத ஒன்றிய அரசை ஆட்டி, அசைத்து, அடிபணியச் செய்யும் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : தொழிலாளர்களின் சிந்தனைக்கு…!

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்ட-வேயாகும்.இதைத் தவிர, எங்களுக்குப் பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காகத் தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, […]

மேலும்....

தலையங்கம் : தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானவை உச்சநீதிமன்றம் கண்டனம்!

நீண்ட காலமாக தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்ற தகுதியுடன் உள்ள தமிழ்நாடு அரசின் அமைச்சரவை முடிவான _ பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை சம்பந்தமான பிரச்சினையில் ஒரு பெரும் சட்டப் போராட்டமே நடந்து வருகிறது! நேற்று (27.4.2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்துள்ளது. மசோதாக்களை மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் – மாநில அரசின் பரிந்துரைகளையல்ல! ‘‘தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. […]

மேலும்....