ஆசிரியர் பதில்கள் : அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் போராட்டம் நியாயமானது! முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும்!

கே:       ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியால் இழிவு செய்யப் பட்டிருந்தும், “தூக்கிப் போட்ட துணியைப் பெற்றுக்கொண்டது எனது பாக்கியம்’’ என்கிறாரே! ஆரிய ஆதிக்கமும் சூத்திரர் அறியாமையும் போட்டி போடும் நிலைபற்றித் தங்கள் கருத்து என்ன?                – முகமது, மாதவரம் ப:           ஒரு ஆளுநர் பதவிக்கான மதிப்பையும் மரியாதையும் இதன்மூலம் கொச்சைப்-படுத்தப்பட்டதுமல்ல; இப்படி பூணூல் திருமேனிகளிடம் அவர் சால்வைகளைத் தூக்கியா போட்டிருக்கிறார்? பெண்ணையும் சூத்திரச்சியாகப் பார்க்கும் ஆரிய ஆணவத்தின் முன் அம்மையார் மண்டியிடுவது மகா […]

மேலும்....

நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

12.4.2022 முதல் 26.4.2022 வரை 12.4.22                –              பாக். புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு 12.4.22 –              எரிசக்தி, பருவநிலை தர வரிசையில் தமிழ்நாடு முதலிடம். 12.4.22 –              மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். 12.4.22 –              ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை: ம.பி.யில் 77 பேர் கைது. 13.4.22 –              ‘சமபந்தி போஜனம்’ இனி ‘சமத்துவ விருந்து’ என அழைக்கப்படும்  கண்காணிப்புக் குழு […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (100)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் ஆண் இனப்பெருக்க இயங்கியல்: பெண் இனப்பெருக்க உறுப்புகள் பல நிலை மாற்றங்களும் வளர்ச்சியும் அடைவது போலவே, ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றன. உடலுக்கு வெளியே இடுப்புக்குக் கீழ், உடலின் தொடைகளுக்கு இடையே விதைப்பையில் இருக்கும், இரண்டு விதைகளிலும், ஆண் பருவமடைந்ததும், ஆண்ட்ரஜன், டெஸ்டோஸ்டீரான் ஊக்கி நீர் சுரப்பால், விந்து உற்பத்தி தொடங்குகிறது. சரியாக முதிர்ச்சியடையாத ஆண் அணுக்கள் விதைகளில் உற்பத்தியாகி, விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epidedymis) வந்து சேரும். அங்கு ஆண் அணுக்கள் […]

மேலும்....

சிந்தனை : தேர்தல் ஆதாயத்திற்கு மத வன்முறையைத் தூண்டும் ஹிந்துத்துவ அமைப்புகள்

சரவணா இராசேந்திரன் 15 ஜூலை 2018 அன்று அமெரிக்க புலனாய்வுத் துறை பயங்கரவாத அமைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில்,  விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் மத பயங்கரவாத அமைப்புகள் என்று குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க உளவு அமைப்பு ஆண்டுதோறும் உலக உண்மைத் தகவல்நூல் என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் வரலாறு, அங்குச் செயல்படும் அமைப்புகள், மத அமைப்புகள், அரசியல் அமைப்புகள், மக்கள், அரசுகள், கட்சிகள், பொருளாதாரம், எரிசக்தி, புவியியல், தகவல்தொடர்பு, […]

மேலும்....

மே தினம் : உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வோம்!

முனைவர் வா.நேரு தாராளமயம், தனியார் மயம், உலக மயம் வந்தால் பாலும் தேனும் தெருக்களிலே ஓடும் என்றார்கள் சிலர். ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக இருக்கிறது. இலங்கை மாபெரும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. “இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை நிலவுகிறது. இந்த நிலைமையும் இதன் விளைவுகளும் பன்னாட்டு ஊடகங்களில் காட்டப்படுவதில்லை. ஆய்வுக்கூட இயந்திரங்கள் வேலை செய்யவும், அறுவை சிகிச்சைகள் […]

மேலும்....