சிந்தனைக் களம் : 200 ஆண்டுகள் இளைஞராய் வாழ்க!

முனைவர் வா.நேரு   இனி வரும் உலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்று சிந்தித்த தந்தை பெரியார் “சுகம் பெறுவதிலும், போக போக்கிய மடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும் ஆராய்ச்சியும், முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும்” என்றார். மனிதர்களின் பல நூற்றாண்டுக் கனவு நீண்ட நாள்கள் வாழ்வது. நீண்ட நாள்கள் வாழ்வது மட்டுமல்ல, இளமையாகவே வாழ வேண்டும் என்பதும் மனிதர்களின் நீண்ட நாள் கனவு ஆகும். அதற்கான ஆராய்ச்சி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது, இன்றைய காலகட்டத்தில். […]

மேலும்....

சிறுகதை : குடும்பத்தில் ஒருவன்

ஆறு.கலைச்செல்வன் கீழத்தெரு என்று அழைக்கப்படும் அந்தத் தெரு அன்று அல்லோலகல்லோலப்பட்டது. தெரு முழுக்கத் தோரணங்கள். மூலைக்கு மூலை ஒலி பெருக்கிகள். அவற்றில் பெருத்த இரைச்சலுடன் பாடல்கள். எல்லாம் எதற்காக? அந்தத் தெரு முனையில் முதல்வீடாக இருக்கும் அருண்குமார் தன் வீட்டில் கோயில் கட்டி அதற்கு ‘கும்பாபிஷேகம்’ நடத்த உள்ளான். தன் வீட்டின் ஒரு பகுதியுடன் எதிரே உள்ள சாலையையும் ஆக்கிரமிப்பு செய்து அந்தக் கோயிலைக் கட்டியுள்ளான். கோயில் கட்டும் பணியைத் தொடங்குமுன் தன் வீட்டின் முன் ஓர் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (95)

மிகு இரத்த அழுத்தம் (HYPER TENSION) மரு.இரா.கவுதமன்   நோய்க் காரணிகள்: முதன்மை மிகு இரத்த அழுத்தம்: மரபணு இந்நோய்க்கு ஒரு காரணியாக அறியப்பட்டுள்ளது. மரபணு ஆய்வில் 35 வகை மரபணுக்கள் மிகு இரத்த அழுத்தத்திற்குக் காரணியாக அறியப்பட்டுள்ளன. வயது மூப்பின் காரணமாக மிகு இரத்த அழுத்தம் ஏற்படலாம். மேற்கத்திய உணவு வகைகள் (Western Diet), வாழ்க்கை முறைகள் நாளடைவில், மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிக பருமன் உடையவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

 முதல் முயற்சியில் அய்.ஏ.எஸ்.   நமது இலக்குகளை அடைய உண்மை உழைப்பும் ஆர்வமும் இருந்தால் போதும், அதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் நாம் அந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷானாஸ் இலியாஸ் என்னும் பெண். குடும்பம், குழந்தை என மாறிய நிலையிலும் அய்.ஏ.எஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்காக அவர் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் அவராகவே படித்து வெற்றி பெற்று உள்ளார் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (287)

ஈரோடு சமூகநீதி இளைஞரணி மாநாடு கி.வீரமணி திராவிடர் கழகத்தின் முக்கிய வெளியீடு-களில் ஒன்றாகவும், இன்றளவும் கழகப் பேச்சாளர்களாலும், வரலாற்று ஆய்வாளர் களாலும் சுட்டிக் காட்டப்படும் முக்கிய நூலாகவும் திகழ்கின்ற ‘கீதையின் மறுபக்கம்’’ 1.4.1998 அன்று பெரியார் திடலில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. (அதற்குப் பிறகு 26 பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.) இந்த வெளியீட்டு விழாவில் நா.கிருஷ்ணன், (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) வெளியிட பொறியாளர் சோ.ஞானசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொள்ள மற்றும் ஏராளமான  பேராசிரியர்களும், கழகப் பொறுப்பாளர்களும் […]

மேலும்....