பெண்ணால் முடியும்!

கண் பார்வை இழந்த நிலையிலும் லட்சியம் வென்றவர்!   ‘நாட்டிலேயே பார்வையற்ற முதல்பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி’ என்ற சிறப்பு இவருக்கு உண்டு. அவர்தான் பிராஞ்சல் பாடில். மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ‘தானே’ மாவட்டத்தின் ‘உல்ஹாஸ் நகர்’தான் இவருடைய சொந்த ஊர். ஒரு முறையல்ல. இருமுறை தேர்வெழுதி, இரண்டிலும் வென்றிருக்கிறார். இவர் தமது பார்க்கும் திறனை 6ஆம் வயதில் முற்றாக இழந்தார். எந்த ஒரு பயிற்சி நிறுவனத்துக்கும் இவர் போகவில்லை; தேர்-வெழுதத் தாமே பயிற்சிகளை மேற்கொண்டார். இவருக்காக புத்தகங்களை […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (94)

மிகு இரத்த அழுத்தம் (HYPER TENSION) மரு.இரா.கவுதமன் இரத்த அழுத்தம்  (Blood Pressure) நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஓர் அடிப்படைச் செயல்பாடு ஆகும். தூய்மைப்படுத்தப்பட்ட இரத்தம் தமனிகள் (Arteries), தந்துகிகள் மூலம் உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவும், செலுத்தப்படுவதற்கும், இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தமே காரணம். இதயத்திலிருந்து, இரத்தம் இந்த அழுத்தத்தின் மூலமே மூளைக்குச் செலுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் இல்லாவிடில் மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்பட்டு, மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிடும். உடல் இயக்கம் நின்று விடும். […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (93)

பாரதியும் பொதுவுடைமையும் நேயன்     பாரதி பொதுவுடைமைவாதி என்று, பொதுவுடைமைவாதிகளே தூக்கிப் பிடிப்பது-தான் வியப்புக்குரியது; நகைப்புக்குரியது. நூறு மனிதர்களில் ஒரே ஒருவன்தான் பொதுநலத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆயிரத்தில் ஒருவன்தான் தன்னைப்போலவே பிறருக்கும் உணர்வுண்டு என்று எண்ணுகிறான். பத்தாயிரத்தில் ஒருவன்தான் எல்லோரும் சமம்,  எல்லோரும் பொது என்கிற உணர்வு கொள்கிறான். அப்படி பத்தாயிரத்தில் ஒருவன்தான் பொதுவுடைமைவாதியாக உருவாகிறான். அப்படிப்பட்ட பொதுவுடை-மைவாதிகளே சிலவற்றில் தவறான புரிதல் கொண்டுள்ளதை வரலாறு நெடுகக் காண முடியும். குறிப்பாக இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் […]

மேலும்....

மருத்துவம் : மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

இன்றைய நவீன அறிவியல் உலகம் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. மக்களின் மூடநம்பிக்கையை அகற்றி, மனிதர்களிடம் பகுத்தறிவுப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறது. மனித மூளை புராணங்களில் கட்டுண்டிருந்த நிலையில், நவீன மருத்துவ அறிவியல் குருதிக் கொடை வழங்குவதற்கே தயங்கிய மனிதர்-களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. விழிக்கொடை, உறுப்புக் கொடை, உடல் கொடை எனப் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டது. மருத்துவ அறிவியலில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் விமானத்தில் கொண்டு வரப்பட்டு சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டதைத் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : இதுதான் சரியான ‘பார்முலா’!

கே:       அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளை மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசு அழைத்துக்கொள்ள வசதியாய் சட்டம் இயற்றுவது பாசிச செயல்பாடல்லவா?                – குமார், மதுரை ப:           நன்றாக நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிருவாகத்திற்கு இடைஞ்சல் செய்யும் திட்டமாக இது அமைந்துவிடக் கூடும் என்ற அச்சம் பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கும், முதல் அமைச்சர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் இதனைக் கைவிடுவது முக்கியம். கே:       உ.பி. தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் தனித்து நின்று களம் காண்பதைத் தவிர்க்க தமிழ்நாட்டின் […]

மேலும்....