எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (98)

பாரதியின் வழக்குரைஞர்கள்! நேயன் தமிழ் அறிஞர்கள், இலக்கிய மேதைகள், பொதுவுடைமை இயக்கத்தவர், பத்திரிகை-யாளர்கள், பாரதியின் விசிறிகள் என்று பலர், பாரதியின் கருத்துகளுக்கு முட்டுக்கொடுத்து முற்போக்குக் கருத்துகளாக நிறுத்த அவரது வழக்குரைஞர்களாகவே மாறி வாதங்களை வைக்கின்றனர். அப்படி அவர்கள் உளச்சான்றுக்கு எதிராய், பாரதியை முற்போக்காளராய்க் காட்டும் முனைப்பில் தப்பான முடிவை மக்கள் முன் வைப்பதோடு, தங்களின் தகுதியை தாழ்த்திக் கொள்வதோடு, தங்களின் ஒருதலைச் சார்பையும் வெளிக் காட்டுகின்றனர். அதனால்தான் அவர்களை வழக்குரைஞர்கள் என்று நான் அழைக்கிறேன். தான் எடுத்துக்கொண்டதை […]

மேலும்....

கவிதை : திராவிட முரசறைவோம்! எழுவோம்! வெல்வோம்!

முனைவர் கடவூர் மணிமாறன் தேன்தமிழில் பிள்ளைகட்குப் பெயர்கள் வைப்போம்;                திராவிடர்நாம் என்பதிலே பெருமை கொள்வோம்; வான்போலும் பரந்தமனம் வாய்த்த நாமோ                வைக்கத்தின் போர்மறவர் அய்யா நோக்கில் ஏன்? எதற்காம்? எப்படியென் றெல்லாம் கேட்டே                ஏற்புடைய அறிவார்ந்த வீரர் ஆனோம்! கூன்விழுந்த பூணூலார் நடிப்பை ஏய்ப்பைக்                கூர்மதியால் என்றென்றும் எதிர்ப்போம் நாமே!   நம்கையால் நம்கண்ணைக் குருடாய் ஆக்கும்                நயவஞ்சர் கைக்கூலி பலரும் ஆனார்; தம்சிறப்பை உயர்மான மரபை எல்லாம்                […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (291)

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா! கி.வீரமணி டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து 4.10.1998 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கழகத் தோழர்களை, 6.10.1998 அன்று காலை 7:00 மணிக்கு புதுடில்லி இரயில் நிலையத்தில், சந்திரஜித் யாதவ் அவர்களும் நானும் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். 84 தோழர்களையும் இரு பேருந்துகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தோம். மறுநாள் அடிக்கல் நாட்டு விழாவும் மாநாடும் நடக்கவிருப்பதால் தோழர்களுக்கு அன்று ஓய்வு […]

மேலும்....

பெண்ணால் முடியும்!: தடகளப் போட்டியில் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை!

சென்னை நேரு விளையாட்டரங்கில் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் கலந்துகொண்டு, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிச் சென்று, இலக்கை 14:6 நொடிகளில் கடந்து, தங்கப் பதக்கத்தினை வென்றார் நந்தினி கொங்கன். சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. மனிதவள நிருவாகம் இறுதியாண்டு படிக்கும் இவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளி வென்று, தடகள விளையாட்டுகளில் வெற்றி மங்கையாக உலா வருகிறார். அவரது வெற்றிப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில், […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : அண்ணாவின் பார்வையில் வெள்ளுடை வேந்தர் (27.4.1852 – 28.4.1925)

தலைப்பாகையுடன் கூடிய வெள்ளுடை, சட்டைப் பையில் தங்கச் சங்கிலியுடன் கூடிய பாக்கெட் கடிகாரம், அதில் ஒரு பேனா, மூக்குக் கண்ணாடி, நெடிய தோற்றம், கம்பீரமான பார்வை இவற்றின் ஒட்டு மொத்தமான வடிவம்தான் வெள்ளுடை வேந்தர் திராவிடப் பெருந்தகை பிட்டி தியாகராயர். அவரின் 170ஆம் பிறந்தநாள் இந்நாள் (1852). 1882இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக உள்ளே நுழைந்த தியாகராயர் 1925 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பணிபுரிந்த சாதனையாளர் அவர். மாநகர சபையில் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர்தான். […]

மேலும்....