நூல் மதிப்புரை : மாண்புரு மனிதர்கள்

ஆசிரியர்: க.முருகேசன் வெளியீடு: பாரதி புத்தகாலயம், பக்கம்:184, விலை: ரூ. 180 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. தொலைபேசி: 044-2433 2424 தமிழ் நாவல்கள் காலந்தோறும் பல பரிணாமங்களை அடைந்து வந்திருக்கின்றன. அதனின் முக்கிய மய்யப் பொருளாக எல்லா காலத்திலும் மனிதர்களின் மாண்புகளை எடுத்துக் கூறி, அவற்றுக்கு அரணாகச் செயல்படும் தலைவர்களின் கொள்கை வழியில் பயணிக்கவும், சக மனிதர்கள் மீது அன்பைப் பொழிவதுமாக நாவல்கள் எழுதப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் எழுத்தாளர் க.முருகேசன் அவர்கள் எழுதிய, […]

மேலும்....

கல்வி : தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை!

முனைவர் வா.நேரு திராவிட மாடல் என்பது இன்று தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவிலும் உலக அளவிலும் பேசப்படும் ஒரு கருத்தியலாக மாறியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அடைய முடியாத உயர் கல்வி சதவிகிதத்தை (50 சதவிகிதம்) தமிழ்நாடு அடைந்ததும் அதிலும் பெண்களின் உயர் கல்வி 50 சதவிகிதத்தைத் தொட்டிருப்பதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதைப்போல திராவிட மாடலில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகையில்  சரிபாதியான  பெண்கள், உள்ளாட்சிப் பதவிகளிலும் 50 சதவிகிதத்தைப் பெற்றிருக்-கிறார்கள். இது […]

மேலும்....

உலகப் புத்தக நாள் : நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்!

கி.வீரமணி ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக நாள்! ஆங்கில இலக்கியத்தில் மிகப் பெரும் புலமையோடு உலகம் முழுவதிலும் உள்ளோர் பரவலாக அறிந்துள்ள, கற்றுள்ள ஷேக்ஸ்பியர் அவர்கள் நினைவு நாளையே, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகிறோம்! நல்ல நண்பர்கள் _ விரும்பத்தகுந்த சிறந்த நட்புடைமையாளர்கள் _ நம் வாழ்நாளைப் பெருக்கும் மகத்தான மருத்துவர்கள் ஆவார்கள்! நண்பர்கள் _ மனந்திறந்து உரையாடி மகிழும் நண்பர்கள் இருந்தால் _ மனம் எப்போதும் இளமையோடு _ வளமையோடு இருக்கும், முதுமையின் தாக்கத்தை […]

மேலும்....

சிறுகதை : நோயா? பேயா?

நா.கோகிலன், ஜோலார்பேட்டை டிசம்பர் மாதம், வகுப்பறை ஜன்னலுக்குள் நுழைகிற வெயிலை அப்படியே கட்டிப் பிடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. எலுமிச்சை வெயில் அழகாகவும், தேநீர் போல் கதகதப்பாகவும் இருந்தது. +2 விலங்கியல் டீச்சர் கருவியல் பாடத்தைப் படித்துக் காட்டினார். “ஆண், பெண் வேறுபாடுகளையுடைய இருபால் உயிரிகளில் இனச்செல் உருவாவதே கருவியலின் முதல் படி ஆகும்.’’ தாமரைச் செல்வி ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தாள். வெளியே மண் சாலை தெரிந்தது. சாலையை ஒட்டி விளையாட்டு மைதானம். மைதானத்தில் டிசம்பர் மாதத்து நாய்கள், விளையாடிக் […]

மேலும்....

சிந்தனைக் களம் : கருநாடகா மேகேதாட்டுவில் அணை கட்டமுடியுமா?

சு.பழநிராசன் ஒருங்கிணைப்பாளர், சமவெளி விவசாயிகள் இயக்கம் அண்மையில் கருநாடக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை  கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கருநாடக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு 2007 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், அதனை சில மாற்றங்களோடு ஏற்றுக்கொண்ட 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் அவமதிக்கும் அடாவடித் தனமாகும். இந்த அறிவிப்பைக் கண்டித்தும், ஒன்றிய அரசு மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் […]

மேலும்....