சிந்தனைக் களம் : குருமூர்த்தி அய்யர் பதில் சொல்வாரா?

‘துக்ளக்கை’ நடத்துவது வயிற்றுப் பிழைப்புக்கே! – சொன்னது ‘சோ’ ராமசாமி மின்சாரம் கேள்வி: கோயில்களுக்குச் சொந்தமான 2043 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்ரமிப்பு நிலங்கள் குறுகிய காலத்தில் மீட்கப்பட்டுள்ள விஷயத்திற்காகவாவது தி.மு.க. அரசைப் பாராட்டுவீர்களா, மாட்டீர்களா? பதில்: மீட்ட நிலங்களை தி.மு.க. என்ன செய்கிறது என்று பொறுத்துப் பார்த்துப் பாராட்டலாம் என்று காத்திருக்கிறேன். – ‘துக்ளக்’ 9.3.2022 கோயில் நிலங்களை மீட்டது பற்றி துக்ளக்குக்கு மகிழ்ச்சியா இல்லையா என்பதற்குப் பதில் சொல்லக் கூட மனம் இல்லை. இதுதான் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பறிக்கவே ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையும் நுழைவுத் தேர்வும்!

மஞ்சை வசந்தன்   ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போட்டு, ஒடுக்கப்பட்டோர் கல்வியைப் பறிக்கும் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது  என்று கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். திராவிடர் கழகம், தி.மு.கழகம் போன்ற சமூகநீதியில் அக்கறையுள்ள இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்துவதற்காக ஒன்றிய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில், ஒன்பது பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. ‘உலகம் முழுவதுமே, பின்லாந்து போல […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : சபாஷ் அம்பேத்கர்!

 தந்தை பெரியார் தோழர் டாக்டர் அம்பேத்கர் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில், “மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன. இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்-பார்ப்பது […]

மேலும்....

தலையங்கம் : கடவுளும் ஆக்கிரமிப்புக் குற்றவாளியே!

உயர்நீதிமன்றத்தின் வளையாத – வரவேற்கத்தக்க தீர்ப்பு! ‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. சாலையை ஆக்கிரமித்து கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள் இடத்துக்குச் செல்லும் பாதை தடுக்கப்படுவதாகவும், நாமக்கல் முன்சிஃப் நீதிமன் றத்தில், பாப்பாயி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், பாப்பாயிக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை […]

மேலும்....

டாக்டர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்

பிறந்த நாள்: 14.4.1891 தந்தை பெரியாரும், அம்பேத்கரும் லட்சியப் பயணத்தில், கொள்கைப் போராட்டங்களில் இரு இணை கோடுகள்! தத்துவங்களில் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்! – கி.வீரமணி, 16.3.2018

மேலும்....