ஆசிரியர் பதில்கள் : படுமோசமான தீர்ப்பு!

கே: கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் ஆள்களை மட்டுமே கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியுள்ள செயல் மிகப் பெரிய ஆபத்தின் அடையாளம் அல்லவா? – அ.மன்னார்சாமி, தாம்பரம் ப: மிக ஆபத்துதான்; துணிந்துதான், இப்படி அதிகார துஷ்பிரயோகத்தை ஆர்.எஸ்.எஸ். ஆட்சி செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடம்தான் இறுதியில் இறையாண்மை உள்ளது. நிச்சயம் முடிவு கட்டுவார்கள். அதுவரை ‘நுனிக்கொம்பேறிமூக்கன்’களாகவே செயல்பட்டு உச்சகட்டத்திற்குச் செல்லத்தான் செய்வர்! கே: எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பது […]

மேலும்....

சிந்தனைக் கட்டுரை : பெரியாரும் உலக எழுத்தறிவு நாளும்

முனைவர் வா.நேரு உலக அளவில் எழுத்தறிவு நாள் (The World Literacy Day) என்று செப்டம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1965-இல் ஈரான் நாட்டில் உள்ள டெக்ரான் நகரில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது. அங்கு கல்லாமையைப் பற்றிக் கவலை கொண்டு, அதற்கென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து கல்லாமையை உலக அளவில் நீக்கவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உலக அளவில் பேச வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதை யுனெஸ்கோ நிறுவனத்திற்கு அனுப்பி-யிருக்கிறார்கள். […]

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளி : சவுந்தரபாண்டியனார்

“சுயமரியாதை இயக்கச் சுடரொளி’’ பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தர-பாண்டியனார் அவர்களின் பிறந்த நாள் 15.9.1893. அந்தக் கால-கட்டத்தில் நாடார் சமுதாயம் என்பது கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான ஒன்று. அத்தகைய ஒரு சமுதாயத்தில் தோன்றி, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாசிலாப் பொதுத்தொண்டை ஆற்றிய பெருமகன் ஆவார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர். 12 ஆண்டுகள் சென்னை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்து அரும்பணியாற்றியவர். அந்தக் காலகட்டத்தில் அவர் முன்மொழிந்த தீர்மானம் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. […]

மேலும்....

வரலாறு : வ.உ.சி.யும் ராஜகோபாலாச்சாரியும்

“தியாகம் என்பது, பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும், எவ்விதமான அவமானங்களையும் லட்சியம் செய்யாமல், பல இன்னல்களை ஏற்று தொண்டாற்றுவதும் ஆகும்’’ (‘விடுதலை’ 12.1.1966) _ என்று தியாகம் என்பதற்குத் தெளிவான சூத்திரத்தைச் சொல்லியுள்ளார், தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார். இந்த இலக்கணச் சூத்திரத்தைப் பொருத்திப் பார்த்தால், அது 5.9.1872 அன்று பிறந்தாள் காணும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு மிகவும் பொருந்தும். வெள்ளையனை எதிர்த்து, சுதேசிக் கப்பல் ஓடவிட்டு, இரட்டை ஆயுள் தண்டனை ஏற்றவர்; […]

மேலும்....

சிறுகதை : அம்மாவின் கண்கள்

ஆறு.கலைச்செல்வன் மரகதம் அம்மாவுக்கு மிகப் பெரிய குறை என்னவென்றால், அவருக்குக் கண் பார்வை நாளுக்கு நாள் மங்கிக் கொண்டு வந்ததுதான். அவரது ஒரே மகன் கண்ணப்பன். தீவிரமான கடவுள் நம்பிக்கையாளன். விவசாயத் தொழில் செய்து வந்தான். ஓரளவு படித்தவன். மரகதம் அம்மாள் தன் மகனிடம் தன்னை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என பல நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவன் வயதாகியும் திருமணம் […]

மேலும்....