மூடநம்பிக்கை : நாடி ஜோதிடம் உண்மையா?

ஒளிமதி மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவை-யாகும். நல்லவேளை மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான். “ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’’ என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டும். கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் […]

மேலும்....

மறுப்பு

சமூகநீதிச் சலுகைகள் நிருவாகச் சீர்கேடா? – மோடிக்கு மறுப்பு! சரவணா இராசேந்திரன் இலவசத் திட்டங்களை மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் என்று பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசிய பிரதமர், “இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏமாற்றும் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் உங்களுக்காக புதிய அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அல்லது பாதுகாப்பு வழித்தடங்-களை உருவாக்க மாட்டார்கள். மாறாக, மக்களுக்கு […]

மேலும்....

பகுத்தறிவு : ஜாதி, மத மூடநம்பிக்கைகள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்த இந்திய நாட்டிற்கு வெளியேயிருந்து வந்த ஆரியர்கள், இந்நாட்டின் பழங்குடித் தமிழ் மக்களை வீரத்தால் வெல்ல முடியாமல், சூழ்ச்சிகளாலும் வலக்காரங்களாலும் மூடநம்பிக்கைகளான கருத்துகளைப் புகுத்தியும் அவர்களை ஒற்றுமை இழக்கச் செய்தும், வேறுவேறாகப் பிரித்தும், அவர்களுக்குள் பகைமை பாராட்டச் செய்தும், ஆட்சி இழக்கச் செய்தும் அடிமைப்படுத்தினர்; அறியாமையில் மூழ்கச்செய்தனர்; அவர்களை இழிவான பிறவிகள் எனத் தாழ்வுபடுத்தினர். நடு ஆசியாவின் குளிர்ப் பகுதியிலிருந்து அவர்கள் வந்ததால், வெப்ப நாடாகிய இந்நாட்டில் வாழ்ந்து வந்த பழங்குடித் தமிழ் மக்களைவிட […]

மேலும்....

உணவே மருந்து!

காளான் ஒரு காப்பாளன்! காளான் வகைகள்: காளான்களில் நஞ்சு உள்ளவை, நஞ்சு இல்லாதவை என இரண்டு வகைக் காளான்கள் உண்டு. நஞ்சுள்ள காளான்கள் பல வண்ணங்களில் இருப்பதோடு, துர்நாற்றம் வீசும் தன்மை கொண்டவை. இதனால் நஞ்சுள்ள காளான்களை உண்ணக்கூடாது. இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. அவற்றில், 1. மொட்டுக் காளான் அல்லது பட்டன் காளான்(Button Mushroom) 2. சிப்பிக் காளான் (Oyster Mushroom) 3. பால் காளான் (Milk Mushroom) என்னும் 3 வகையான காளான்கள் […]

மேலும்....

என்.வி. நடராசன்

மறைவு: 7-8-2018 பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்து கருத்து களைக் கூறும் திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி.நடராசன் அவர்கள். அவர் பிறந்தது 12.11.1912. பெற்றோர் விசயரங்கம், தனலட்சுமி ஆகியோர் ஆவர். இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான் அந்தக் கைக்குழந்தை. பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.) சிறைக்கோட்டம் சென்றவர். ‘திராவிடன்’ என்னும் இதழை நடத்தி வந்தார். திமுக.வின் அமைப்புச் […]

மேலும்....