டிசம்பர் 6 – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்

டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார் அம்பேத்கர் பெருமையைப் பற்றிப் பேச வேண்டியது தேவை இல்லை. அவர் உலகமறிந்த பேரறிஞர். நாம் அம்பேத்கர் அவர்களை அம்பேத்கர் என்று அழைப்பதற்குப் பதில் பெரியார் அம்பேத்கர் என்று அழைக்க வேண்டும். என்னை பெரியார் என்று அழைக்கின்றார்கள். ஆனதினால் எனக்கு அப்படிக் கூற சற்று வெட்கமாக இருக்கின்றது. அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் […]

மேலும்....

வரவேற்கிறேன் … தந்தை பெரியார் …

தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக்கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார். இது நமது கழகத்திற்கு, கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் […]

மேலும்....

அறிவுக்கு முழு சுதந்திரம் தேவை

… தந்தை பெரியார் … ஜாதி என்பது இன்றைக்கு நமது சமுதாயத்தில் இருந்து வருகிற ஒரு மாபெரும் கேடாகும். இது இன்று நேற்றிலிருந்து வரவில்லை. சுமார் 2000, 3000 ஆண்டுகாலம் தொடங்கி இருந்து வருகிறது. நமது நாட்டில் எத்தனையோ முனிவர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் யாராலும் ஜாதி ஒழிக்கப்படவில்லை. ஆகவே, இனி ஒரு மகான் தோன்றி, ஜாதியை ஒழிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஜாதியின் காரணமாகத்தான் 100க்கு 97 பேராக உள்ள திராவிட […]

மேலும்....

சரஸ்வதி பூஜை ஓர் அர்த்தமற்ற பூஜையே !

– தந்தை பெரியார் சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்து, பெரிய படிப்பாளியாகிக் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! – கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு விளக்கம்

… தந்தை பெரியார் … பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன்படியோ வணங்குவதே இல்லை. மற்றெப்படியென்றால், “கடவுளை” மனிதனாகவே கருதிக்கொண்டு, மனித குணங்களையே அதற்கு ஏற்றிக் கொண்டு, தான் எப்படி நடந்துகொண்டான், தான் எப்படி நடந்து கொள்கிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பனவாகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ […]

மேலும்....