எனது ஆதரவு இதன் அடிப்படையில்தான் – தந்தை பெரியார்

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன். நான் 1900-க்கு முன்னே கடவுள், மத, ஜாதி விஷயங்களின் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன். நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும் வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும் தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்; மாடு – எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக்கொண்டு ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் […]

மேலும்....

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள்

பகுத்தறிவுப் பகலவனாகவும் பார் வியக்கும் சுயமரியாதைச் சிங்கமாகவும் விளங்கியவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஆவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புரட்சியாளர். மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்; மக்கள் அஞ்சி நடுங்கி தமது ஆறாவது அறிவை அடகு வைத்து மாக்களைப் போல வாழக்கூடாது என்பதற்காகவே கடவுள் மறுப்பைத் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். அது ஒரு தேவையான சமூக விஞ்ஞானமாகும். – கி. வீரமணி

மேலும்....

கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும்-தந்தை பெரியார்

இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளிகளாகச் செய்து, அவர்களது ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்க வேண்டியதாகும். மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமுதாய சமத்துவமும் ஏற்படும்படிச் செய்ய வேண்டும். இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத்தான் நாடு என்றும், சுதந்திர […]

மேலும்....

நாகரிகம்- தந்தை பெரியார்

கரிகம்’ என்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரிகம்’ என்பதற்கு ஒரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பில் குறளில் நாகரிகம் என்ற வார்த்தை வள்ளுவரால் உபயோகிக்கப்பட்டிருப்பதாக ஞாபகம். அது தாட்சண்யம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்பட்டிருப்பதாக ஞாபகம். நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, உணவு மற்றும் எல்லா நடவடிக்கைகள், பாவனைகளிலும், பிறரிடம் பழகுவதிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது; எந்த ஆதாரத்தில் […]

மேலும்....

இராமாயணதர்மம்- தந்தை பெரியார்

இராமாயணம் மக்களுக்கு முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் சூழ்ச்சித் தன்மையையும்தான் கற்பிக்கக் கூடுமே தவிர அதில் மனிதப் பண்பு, நேர்மை, நீதி, ஒழுக்கம் ஆகியவைகள் கற்க முடியாது. இராமாயண காவியம் என்பது ஆரியப் புரட்டு என்னும் மாலையில் ஒரு மணியாகும். அதுவும் மிகச் சமீப காலத்தில் கற்பனை செய்த நூலாகும். இந்த இராமாயாணம் என்பது ஒன்றல்ல, பலவாகும். அவற்றுள் ஒன்றுக்கொன்று பல முக்கியமான முரண்பாடுகளும் விரிவும் சுருக்கமும் உடையவையாகும். இவை ஜெயின இராமாயணம், பவுத்த இராமாயணம், ஆனந்த இராமாயணம், […]

மேலும்....