Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

டாக்டர் சி.நடேசன் மறைவு – 18.2.1937

 

 

டாக்டர் சி. நடேசனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு நம் நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி, விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலிருக்கமாட்டான்.
நடேசன் மறைவால் சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும் கவலையும் இருந்த மக்களில் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்துவிட்டார் என்று சொல்கிறோம்.
நடேசன் மறைவால் தமிழ் மக்கள் உள்ளத்தில் துக்க தீப்பொறி குடிகொண்டு விட்டது என்றே கூறுவோம்.
‘குடிஅரசு’- இரங்கல் செய்தி
கட்டுரை 21.02.1937