60 வயதைத் தாண்டிய வறுமையில் வாடும் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கினார். ஆனால், அதற்கான ரூ.250அய் உடனே தர இயலாமல் கடன் சொல்லிவிட்டுப் போனார். ரூ.250 அய்க் கொடுக்க முடியாமல் போகவே மீண்டும் அந்த லாட்டரிச் சீட்டை அதை விற்ற கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார். மறுநாள் லாட்டரி குலுக்கலில் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துவிட்டது. சீட்டு வாங்கியவரைத் தேடிப்போய் அச்சீட்டைக் கொடுத்து ரூ.250 மட்டும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டார். லாட்டரி சீட்டு வியபாரி. சுரேஷ் என்ற கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரியைப் பாராட்டி சென்னையில் சிறந்த மனிதநேயன் விருது வழங்கி அண்மையில் பாராட்டியிருக்கிறார்கள். அந்தச் சீட்டை வாங்கிய அய்யப்பன், நான் சீட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை. எனவே, இந்தச் சீட்டு உங்களுடையதுதான், என்று சொல்லி சீட்டை வாங்க மறுத்தாராம். ஆனாலும் சுரேஷ் அதனை மறுத்து அய்யப்பனுக்கே ஒரு கோடி ரூபாய் கிடைக்கச் செய்துள்ளார். இப்படி விட்டுக் கொடுப்பவர்களெல்லாம் இருக்கும் மாநிலமான கேரள மாநில அரசியல்வாதிங்க முல்லைப் பெரியாறு தண்ணீரை மட்டும் ஏன் விடமாட்டேங்கிறாங்க?