கே : அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் குஜராத் நீங்கலாக மற்றவற்றில் பா.ஜ.க. படுவீழ்ச்சியைப் பெற்றுள்ளதை மதச்சார்பற்ற அணிக்கு நம்பிக்கை தரும் செய்தியாகக் கொள்ளலாமா?
– ரங்கநாதன்,
தாம்பரம்.
ப : நிச்சயமாக –_ மக்கள் பெரிதும் உணர்ந்துள்ளதை இந்த முடிவுகள் காட்டுகின்றன- — _ குஜராத் முடிவுகள் வித்தைகள் மூலமே
என்று !விரிவாக அறிய விரும்பினால் 9.12.2022 ‘விடுதலை’யில் வந்துள்ள அறிக்கையைப் படியுங்கள்.
கே : அய்யா, 90 வயதைத் தொடவிருக்கும் தாங்கள் இளைய சமுதாயம் எதில் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவீர்கள்?
– மோகனசுந்தரம்,
செங்கல்பட்டு.
ப : 1. இளைய சமுதாயம் தங்களது வாழ்வு சிறக்க, ஒளிர, காலத்தைப் போற்றி, வீணாக்காமல் நடந்து வர வேண்டும்.என்பது எமது விழைவு. ‘செல்போன்கள்’ (கைத் தொலைபேசியை) தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.
2. எளிய வாழ்வு _ நுகர்வோர் கலாச்சாரத் தவிர்ப்பு, அறிவியலை, மின்னணுவியலைப் படித்தால் மட்டும் போதாது.
அறிவியல் மனப்பாங்கைப் (SCIENTIFIC TEMPER பெற்ற வாழ்வாக மூடநம்பிக்கையற்ற தன்மையில் ஆக்கிக்கொண்டுமுன்னேறுங்கள்.
3. ‘பெரியார்’ -_ இதற்கெல்லாம் பேராயுதம் ஆனதத்துவம், வழிகாட்டி, வாழ்க்கைநெறி. (எனது வாழ்வு ஓரளவுக்காவது பயனென்று நினைப்பவருக்கு இதுதான்
எமது செய்தி).
கே : எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாய் இருந்தால் 2024இல் பி.ஜே.பி.யைபடுதோல்வியடையச் செய்யலாம் என்ற சூழலில் இந்தியா முழுவதும் அந்த
ஒருங்கிணைப்பை நீங்களும் தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னெடுக்கவேண்டும் என்ற எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
– இளம்பரிதி,
மதுராந்தகம்
ப : நிச்சயம் தமிழ்நாடும், நமது முதலமைச்சரின் செயல்திறனும் ஆளுமையும் மிகவும் பயன்படும் என்பது உறுதி.
கே : அப்பட்டமாக அத்துமீறும் ஆளுநர்களை ஒழுங்குபடுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட முடியாதா? ஆளுநர்களின்
ஆத்துமீறல்களுக்கு தீர்வு என்ன?
– கோவிந்தன்,
திருவண்ணாமலை.
ப : யாரும் அரசியல் சட்டத்திற்கு மேற்பட்டவர்களோ, அப்பாற்பட்டவர்களோ அல்ல. கேரள உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கனவே சில தீர்ப்புகள் மூலம் வலியுறுத்துவது-_ விரைவில் மீண்டும் உச்ச நீதிமன்றதீர்ப்பு – _ ஆணைகள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு அவரை நெருக்கும்.
கே : 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை, ஜனநாயக கட்டமைப்பைத் தீர்மானிக்கும் என்பதால், அதில் சனாதனத்தை வீழ்த்த திட்டமிட
இந்தியா அளவில் தலைவர்கள் சந்திப்புக் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டியது அவசியமல்லவா?
– சிதம்பரம்,
மதுரை.
ப : காலத்தின் கட்டாயமாகி வருகிறது. அவசியச்சூழலையொட்டி அத்தகைய செயற்பாடுகள் ஏற்படுவது நிச்சயம்.
கே : முற்பட்ட ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழக்கின் சீராய்வில் நியாயம் கிடைக்குமா?
– கோபாலன்,
ஆலந்தூர்.
ப : நம்பிக்கைதான் வாழ்க்கை_ – நியாயமான நம்பிக்கை பகுத்தறிவு அடிப்படையில்கிட்டுமென சட்டம் புரிந்தவர்களும் நியாயம் அறிந்தவர்களும் நம்புகிறார்கள்!
கே : அமைச்சருக்கு ஆளுநரைச் சந்திக்க அனுமதி இல்லை; ஆனால் ஆன்-லைன் சூதாட்ட நிறுவனத்தாரை மட்டும் ஆளுநர் சந்திக்கிறார் என்றால் அதன்
உட்பொருள் என்ன?
– நயினார்,
சைதாப்பேட்டை.
ப : ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது அடாத போக்கு அத்து மீறுகிறார் என்பதற்கு சூதாட்டக் கம்பெனியார்களை நேரில் அழைத்துச் சந்தித்தது மிகப்பெரிய
சட்டத் தவறு என்பது நமது கருத்து. தவறாது சட்ட விரோத நடவடிக்கை பாய வேண்டும்.
கே : ‘குஜராத் மாடல்’ என்று முன்னர் மோடி பொய்ப் பிரச்சாரம் செய்தார். உண்மையிலேயே உயர்ந்த ‘திராவிடமாடலை’ இந்தியா முழுவதும் பிரச்சாரம்
செய்தால் என்ன? இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற முடியாதா?
– மங்கை,
அச்சிறுப்பாக்கம்.
ப : பொய் _ நோய்க் கிருமி போல வேகமாகப் பரவும் தன்மையது. உண்மை_ சிகிச்சை போன்று மெதுவாக பலனளிக்கும் முறையாகும். இறுதி வெற்றி சிகிச்சைக்கே என்பதுதான் பொது உண்மை!