செய்திக்கூடை

ஏப்ரல் 01-15
  • செயற்கை சிறுநீரகக் குழாயினை உருவாக்கி, சிறுவர்களின் உடலில் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர் அமெரிக்காவின் வின்ஸ்டன் சலேம் என்ற இடத்தில் உள்ள வேக் பாரஸ்ட் இன்ஸ்டிட்யூட் பார்ரீஜெனரேட்டிவ் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
  • மகாராஷ்டிர உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித  இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல் அமைச்சர் பிருத்விராஜ் சவான் உறுதி அளித்துள்ளார்.
  • லிபியாவில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதால், அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவத்தை அனுப்புவது பற்றிப் பரிசீலிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மக்கள் ஆதரவை இழந்துவிட்டதால் பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
  • திபெத் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக புத்த மதத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளார்.
  • உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் பீரங்கி ராணுவத்தின் 75ஆவது படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • மகன் சிறுவனாக இருக்கும்போது அரசு ஊழியராக இருந்து தந்தை இறந்தால், மகன் பெரியவனான பிறகு கருணை அடிப்படையில் தந்தையின் வேலையைக் கொடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • கழிவுப் பொருள்களைக் கொண்டு செங்கற்களைத் தயாரித்து பர்டியூ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் ஆலிமன் என்பவர் கழிவுப் பொருள்களைச் சேகரிக்கும் இடத்தினைக் கட்டி வருகிறார்.
  • அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஸ்டான்லி டாம் என்பவர், செயற்கைக் குரல் வளையினைத் தயாரித்து பேச்சுப் பெட்டி என்று பெயரிட்டுள்ளார்.
  • அமெரிக்க வாழ் இந்தியப் பெண் சாந்தி சேத்தி தளபதியாக இருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ்.டெகாடர் சென்னையில் 4 நாள்கள் முகாமிட்டிருந்தது.

பிருத்விராஜ் சவான்

தலாய் லாமா

சாந்தி சேத்தி

அர்ஜூன் பீரங்கி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *