நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 21 ஆவது குறும்படப் பயிற்சிப் பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளன.
பயிற்றுநர்கள்
பாலு மணிவண்ணன் (திரைக்கதை), அருண்மொழி (கேமரா), திருநாவுக்கரசு (குறும்படம் / ஆவணப்படம்), லிங்காஸ் செழியன் (போட்டோகிராபி), சுரேஸ்வரன் தம்பிச்சோழன் (நடிப்பு), பொன்குமார் (எடிட்டிங்) மற்றும் திரைப்பட ஆளுமைகள் கலந்து கொண்டு பயிற்சி கொடுக்க இருக்கின்றனர்.
யாருக்கு
கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்கள் – இளைஞர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது.
ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்களும் கலந்து கொள்ளலாம். இறுதி நாள் மாணவர்களே குறும்படம் எடுக்கலாம். உணவு, உறைவிடம், பயிற்சிக் கருவிகளுக்குக் கட்டணம் உண்டு.
பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும், உலகப் புகழ்பெற்ற 7 திரைப்படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு, 12/28, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை – 78.
அலைபேசி: 9444484868 / 9842210538
Email: nizhal_2001@yahoo.co.in