Daro Mat (Dont Be Afraid)
சம்பிரதாயங்கள் எங்கு, எப்போது, யாரால் உடையும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக உடையும். இது ஆருடம் அல்ல! நாகரிகம் வளர, வளர அநாகரிகம் தளர்கிறது அவ்வளவுதான். தேர்வு எழுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வைக்கப்படுகிறாள். வழக்கம்போல மாமியார் மருமகளை தவறாகப் புரிந்துகொண்டு, ராசியில்லாதவள் என்று கரித்துக் கொட்டுகிறாள்.
அது சமயம் கணவனுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்தச் சூழலிலும் அந்தப் பெண் தேர்வு எழுத யாருடைய அனுமதியும் பெறாமல் ரகசியமாகச் சென்று வருகிறாள். கேட்கவா வேண்டும்? மாமியார் ஏசுகிறாள். ஆனால், கணவன் தன் மனைவியின் செயலை ஆதரிக்கிறான். ராசியை கணவன் ஆதரிக்காததோடு, கல்விக்கும் முக்கியத்துவம் தருகிறான். அங்கேதான் சம்பிரதாயம் சில்லுசில்லாக உடைந்து போகிறது.
இது தான் Daro Mat (Dont Be Afraid) குறும்படத்தின் கதை. Tamizh Short Cuts தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இக் குறும்படத்திற்குத் தலைப்பும் தமிழிலேயே வைத்திருக்கலாம். பார்க்கவேண்டிய குறும்படம்.