பசுக் கொலைக்கு
பதறும் நாட்டில்
சிசுக்கொலைப் பற்றி
சிந்தனை யில்லை!
பள்ளி அறையில்
படுக்கும் முன்னே
பகுத்து அறியா
பாமர மூடர்;
கள்ளிச் செடியில்
கரந்த பாலை
கையில் ஏந்துதல்
கயமை யன்றோ!
கட்டிலில் சாயும்முன்
கணக்கிட மறந்த
பட்டிணத்து வாசியோ
கருவியால் கண்டு
கருவிலே கலைக்கிறான்!
உருவில் ஒழியுதொன்று!
கருவில் கரையுதொன்று!
பெற்ற பிள்ளையை
பேண இயலாதவர்
பெற்றுத் தொலைப்பது ஏன்?
பெண் பிள்ளையே
வேண்டாம் என்றால்
பெண்டாட்டி தேடுவது
எங்கே?
Leave a Reply