இரட்டையர்கள்

Uncategorized

உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது.

1887-ஆம் ஆண்டு அக்டோபர் 14 பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் ஏ.இராமசாமி முதலியார் அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராகவிருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் டாக்டர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இந்த இரட்டையர் இருவருக்குமே டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது என்றால், இது என்ன சாதாரணமா! 1917-இல் சர்.ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ இதழின் கவுரவ ஆசிரியராக இருந்து (1927-35) சர்.ஏ.இராமசாமி முதலியார் எழுதிய தலையங்கங்கள் புகழ்பெற்றவை. அவற்றைத் தொகுத்து) நூற்றாண்டு விழாவின்போது வெளியிட்டது திராவிடர் கழகமாகும்.

நூற்றாண்டு விழாவை நடத்தியவர்கள். இரட்டையர்கள் பற்றிய நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்ட கடமையைத் திராவிடர் கழகம் வரலாற்றில் ஆற்றியுள்ளது.அம்மலரின் முகவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு  கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்-, “இவர்கள் மட்டும் பார்ப்பனக் குலத்திலே பிறந்திருந்தால் திருஞான சம்பந்தனுக்குப் பார்வதி தேவியார் ஞானப்பால் கொடுத்ததாகக் கதை கட்டியதுபோல, புதிய சரடு ஒன்றைக் கிளப்பிப் புராணம் எழுதியிருப்பார்கள்’’ என்று எழுதியுள்ளார்.

இரட்டையர்கள் இருவரும் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். தந்தை பெரியாரை மிகவும் மதித்தவர்கள். “தமிழ்நாட்டின் ரூசோ’’ என்று தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் ஆவார்.

வாழ்க ஆர்க்காடு இரட்டையர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *