உங்களுக்குத் தெரியுமா ?

உங்களுக்குத் தெரியுமா? மார்ச் 01-15

பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற
1920-இல் பனகல் அரசர் இந்து அறநிலையத்துறை மசோதாவை கொண்டுவந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபையிலே காட்டுக் கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்
நினைவு நாள்: மார்ச் 1, [1940]

 

மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவுகள் தனிப்பட்ட சுகதுக்கத்தை பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே, தமிழர்களை காணுந்தோறும் நினைக்குந் தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார்.

இந்தி எதிர்ப்பு போர்வீரர் தாளமுத்து
நினைவு நாள்: மார்ச் 12, [1939]

முதல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, சிறையிலேயே மறைந்த மொழிப்போர் தியாகி தாளமுத்து அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *