சிறுவனாய்; இளைஞனாய் தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கையில் ஆர்வங்கொண்டு, பகத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, திராவிடர் இயக்கத்தின் இலட்சியத்தில் உறுதிபூண்டு, தடம் மாறாமலும், தளர்வு கொள்ளாமலும் இன்றளவும் அயராது பணியாற்றி வருபவர் தோழர் கி.வீரமணி. தமிழ் இனத்தின் விழிப்புக்கு வழிகண்ட தந்தை பெரியாரின் வழித்தோன்றலாக, பெரியாரின் தேர்வுகளில் வென்று அவரின் நம்பிக்கையைப் பெற்றவராக பெரியாரின் கொள்கைக் காவலராக, அவற்றைப் பரப்பும் பொறுப்பினராக, அதற்குரிய தகுதியும், திறமையும், உடையவராக விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியாரின் பெருந்தொண்டின் பயன் மங்கி மறையாது தொடர்ந்து நிலைத்திட ஆசிரியர் வீரமணியின் தொண்டு தொடர்ந்தாக வேண்டும்.
– பேராசிரியர் க.அன்பழகன், (பொதுச்செயலாளர், தி.மு.க.) கி.வீரமணி அவர்களின் 50ஆம் ஆண்டு நிறைவு பொன்விழா மலர், 1983.