காயிலுக்குள் சிலை இருக்கும்போது அது ‘கடவுள்’ என்று வணங்கப்படுகிறது. அதற்கு பூசை, படையல் எல்லாம். அதை எல்லா ஜாதியானும் தொடக் கூடாது. அதற்கு சர்வசக்தியும் உண்டு என்கின்றனர்.
ஆனால், அதே சிலை கடத்தப்பட்டவுடன் அதை சிலை என்கின்றனர். தப்பித்தவறிகூட கடவுள் என்பதில்லை. அதன் பின் அதை யார் வேண்டுமானாலும் தொடலாம்; வாங்கலாம்; விற்கலாம்! சர்வசக்தியுள்ள கடவுளாக அது இருக்குமேயானால் அதை எப்படி கடத்த முடியும்?
சர்வசக்தியுள்ள கடவுளாக வணங்கப்பட்ட சிலை கடத்தப்பட்ட பின் அது வரவேற்பறையில் காட்சிப் பொருளாக ஆகிவிடுகிறது. அதன் கடவுள் சக்தி எங்கே போனது? சிலையைக் கண்டுபிடிக்க காவல்துறைதான் வரவேண்டியுள்ளது? தன்னையே காத்துக்கொள்ள முடியாத இந்தக் கடவுள் சிலை, உலகத்தைக் காக்கப் போகிறதா? சிந்திப்பீர்!
– ஆசிரியர் கி.வீரமணி