Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கழிவறை இல்லா வீட்டில் பெண்ணைத் திருமணம் செய்துதரக் கூடாது!


உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பத் வட்டத்தில் உள்ளது பிக்வடா கிராமம். இந்த கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை இல்லை. பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் கவுரவத்தை நிலைநாட்ட, கழிவறை இல்லாத வீடுகளில் உள்ள ஆண்களுக்கு தங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்று பெற்றோருக்கு  பிக்வடா கிராமப் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிக்வடா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அரவிந்த் கூறும்போது, “இயற்கை உபாதைகளுக்கு கிராமத்தில் திறந்த வெளியை பெண்கள் பயன் படுத்துவது  அவர்களது கவுரவத்திற்கு எதிரானது. வீட்டில் கழிவறை கட்டுவதற்கு பணம் இல்லை என்றால், அரசுத் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற்று கழிவறை கட்டலாம். இது குறித்து பஞ்சாயத்தில் ஒருமனதாக நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அதை மீறி யாராவது நடந்து கொண்டால், கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்’’ என்றார்.