நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில்இருந்து அப்ரண்டீஸ் பயிற்சிக்கு நபர்களைத் தேர்வு செய்ய உள்ளது. பிட்டர், எல்க்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், லேபாரட்டரி அசிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கு 153 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பில் சலுகை
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நவ.1, 2017 அன்று 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். பயிற்சிக் காலம் 12 மாதங்கள். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை https://www.iocl.com/people Careers/job.aspx என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு சென்னை, ஹைதராபாத், விஜயவாடா, கொச்சின் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் டிச.3ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் வரும் 18ஆம் தேதியாகும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரூப்-4 மற்றும் விஏஓ பணிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்வு குறித்த இலவச அறிமுக வகுப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-_4 தேர்வும், கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) தேர்வும் இனிமேல் ஒருங்கிணைந்த ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. இந்த புதிய தேர்வுமுறை குறித்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இலவச அறிமுக வகுப்புகள் சென்னை வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் இயங்கும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மய்யத்தில் நவம்பர் 12 மற்றும் 19 (ஞாயிற்றுக்கிழமைகள்) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. இந்த இலவச அறிமுக வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதற்கான தொலைபேசி எண்: 044_26430029, செல்பேசி: 98842 93051