நெல்லிக்காய்
ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் நிறைஞ்சிருக்கிற மூலிகைதான் நெல்லிக்காய். அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. விட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் இருக்கு. யார் வேண்டுமானாலும் இதனைச் சாப்பிடலாம். சாறாக நெல்லிக்காயைப் பிழிந்து வடிவட்டி சாப்பிடுவதைவிட காயாகவே மென்று சாப்பிடுவது அதிகப் பலன் கொடுக்கும்.
இருமல், சளி, பித்தம், மலச்சிக்கல், முடி உதிர்தல், செரிமானத்தைத் தூண்டுதல், ரத்தத்தை சுத்திகரிப்பது, நாக்கில் சுவையின்மையைப் போக்குவது, உயர் இரத்த அழுத்தம், வாய் துர்நாற்றத்தை நீக்குறதுனு பல நோய்களுக்கு நெல்லிக்காய் மருந்தாகப் பயன்படுது. நெல்லிக்காயை தினமும் உணவுல சேர்த்துக் கொள்வதால் எப்பவுமே இளமையா இருக்கலாம். சித்த மருத்துவத்தில் காய கல்ப மூலிகைகளில் ஒன்றாய் நெல்லிக்காய் இருக்கு.