கடவுள் நம்பிக்கை இல்லை; புத்தக் கோட்பாடு பிடிக்கும்!

ஆகஸ்ட் 16-30

 


தந்தையைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், புத்த வழிபாட்டில் கவனம் செலுத்துவது பிடிக்கும் என்று கமல்ஹாசனின் மகள் நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் விவேகம் படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்தது தொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்கள் தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அக்க்ஷரா ஹாசன், கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்தக் கோட்பாட்டில் இணைத்துக் கொண்டேன்

என்றார்.                                –  ‘தி இந்து’ 27.07.2017

தகவல்: சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *