பெரியார் ஊட்டிய உணர்வு எப்போதும் கனன்று கொண்டிருக்கும்!
கே : ஜெயலலிதா இடத்தில் சசிகலா சாதிப்பாரா?
– எஸ். சுமதி, திட்டக்குடி
ப : காலம் அளிக்க வேண்டிய பதில் இது!
கே : சல்லிக்கட்டு கோரிக்கையில் இளைஞர்களின் வெற்றி எதைக் காட்டுகிறது?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப : பெரியார் ஊட்டிய உணர்வு எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு _ தமிழ்நாட்டில் என்பதைக் காட்டுகிறது.
கே : சாதனையால் பெறுகின்ற வெற்றிக்கும், விளம்பரத்தால் பெறுகின்ற வெற்றிக்கும் என்ன வேறுபாடு?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : உண்மைக்கும் போலிக்கும் உள்ள வேறுபாடு!
கே : வேளாண்மையை _ விவசாயிகளைப் புறக்கணிக்கும் இந்தியா எப்படி முன்னேற முடியும்?
– இ.சீதாலட்சுமி, தாம்பரம்
ப : ‘மனுதர்ம’ ஆட்சியில் விவசாயம் பாவகரமான ஒன்று அல்லவா _ தெரியாதோ நோக்கு?
கே : பட்டியல் இன மக்களின் ஜாதிச் சான்றுகள் ‘ன்’ விகுதியில் வழங்கப்படும் நிலை இன்றும் காணப்படுவதை தாங்கள் நீக்க முயற்சிப்பீர்களா?
– வேங்கை வேந்தன், கீழவாளாடி
ப : ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றி பல கூட்டங்களில் பேசியுள்ளோம், எழுதியுள்ளோம். முயற்சி தொடரும்.
கே : ஊடகங்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்ப சட்டரீதியாக ஏதேனும் செய்ய முடியுமா?
– ஜெ.குமரவேல், துறையூர்
ப : நீதிமன்றங்களிலும் பழமைப் பாசிகள் படர்ந்துள்ளனவே. எப்படி உறுதியாய்க் கூறமுடியும்?
கே : திருச்சி சிறுகனூரில் “பெரியார் உலகம்’’ எப்போது அமையும் என்ற எங்களின் ஆவலை நிறைவு செய்யும் வகையில் தகவல் தருவீர்களா?
– அ.சண்முகம், திருச்சி
ப : 2 ஆண்டுகளில் பெரியார் சிலை, கம்பீரமாக 135 அடி சிலை எழுந்து நிற்கும். பணிகள் துவக்கப்பட்டுவிட்டன!
கே : உ.பி.யில் ‘மோடி அலையையெல்லாம் புஸ்வாணமாக்கி’, இரண்டு இளைஞர்கள் (இராகுல், அகிலேஷ்) சைக்கிள் மூலம் சவால் விடுகின்றனரே, (மதக்) கலவர நாயகர்கள் கதி என்னவாகும்?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப : பொறுத்திருந்து பார்ப்போம்!
கே : டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் இடம்பெற்ற வண்டி அம்மன் கோயில் வடிவில் அமைக்கப்பட்டு ‘காளி’ போன்றவை இடம்பெற்றது தமிழ்ப் பண்பாட்டின் கூறா?
– அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி
ப : நிச்சயமாக இல்லை. ஆரியப் பண்பாட்டின் ஊடுருவல். தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்குப் போயும் போயும் ஆட்சியாளருக்கு இதுதானா கிடைத்தது. மகா வெட்கம்! ஸீ