ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு மூலபத்திரங்கள் பட்டா, சிட்டா அடங்கல், நிலவியல் வரைபடம் (F.M.B.) மற்றும் (A-Registor) ‘அ’ பதிவேடு வில்லங்க சான்றுகள் முதலி-யவைகளை வைத்து பார்த்தால் தெரிந்துவிடும்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சொத்தை வாங்குபவர்கள் சொத்தின் உரிமையாளர்களிடம் கேட்கும்போது, சொத்தின் உரிமையாளர்கள் முன் பணம் கேட்டாலே போலியாக விசாரிப்பவர்கள் விலகிக் கொள்வார்கள். யாரும் பணம் கொடுத்து ஏமாற தயாராக இருக்க மாட்டார்கள். உண்மையாக சொத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் முன் பணம் கொடுத்து ஆவணங்களை சரிபார்ப்பதற்கு தயாராக இருப்பார்கள். இதிலிருந்தே சொத்தை வாங்க முன் வருவார்களா? வரமாட்டார்களா? என்பதை சொத்தின் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு முன் பணம் வாங்கிக் கொண்டு ஆவணங்களை கொடுக்கும் சில சொத்தின் உரிமையாளர்கள் ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. எனவே, ஆவணங்களை சரிபார்க்க ஒரு நல்ல வழக்குரைஞரை உடன் அழைத்துச் சென்று ஆவணங்களை சரிபார்த்த பின்பு முன் பணம் கொடுத்து, ஆவணங்களின் நகல்களை பெற்றுக் கொண்டு தெளிவாக சரிபார்த்த பின்பு சொத்து வாங்க முடிவு செய்வது நல்லது. இவ்வாறு முன் பணம் கொடுக்கும்போது கிரைய ஒப்பந்த ஆவணங்களை எழுதிக் கொள்வது மிகவும் நல்லது. ஆவணங்கள் சரியாக இல்லாத பட்சத்தில் கொடுத்த முன் பணத்தை அப்படியே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை எழுதிக்கொண்டால் சொத்தை வாங்குபவருக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது.
இதேபோல் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சொத்தை வாங்க மறுத்தாலோ அல்லது கால தாமதம் செய்தாலோ குறிப்பிட்ட காலத்திற்குள் கிரைய ஆவணம் எழுதிக் கொள்ளவில்லையென்றால் சொத்தை வாங்குபவர் கொடுத்தப் பணத்தை திருப்பித் தருவதில்லை என்றும் அல்லது கால தாமதத்திற்கான செலவை பிடித்துக் கொண்டு மீதி பணத்தை சொத்தின் உரிமையாளர் சொத்தை வாங்குபவர்-களுக்கு கொடுக்க வேண்டுமென்றும் ஒரு நிபந்தனையை கண்டிப்பாக எழுதிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எழுதிக்கொண்டால்தான் சொத்தை வாங்குபவர்களுக்கும், சொத்தை விற்பவர்-களுக்கும் பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை. பிரச்சினைகள் வந்தாலும், ஆவணத்தின் மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் முக்கிய-மான ஆவணம் என்றால் ‘சிட்டா’. இந்த ‘சிட்டா’ ஆவணம் வட்டாட்சியர் அலுவலகத்தி-லேயே பெற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் ‘சிட்டா’ ஆவணத்தை பொருத்தவரை கிராம நிர்வாக அலுவலர் தான் சரியான விபரங்களை வைத்திருப்பவர். சிட்டா ஆவணத்தை பாது-காக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.
இப்படிப்பட்ட சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், உரிமையாளரின் தந்தை பெயர், கணவர் பெயர், சொத்தின் சர்வே எண், சப்_டிவிஷன் எண், சொத்து எந்த கிராமத்தில் உள்ளது என்றும், எந்த வட்டம், எந்த மாவட்டத்தில் உள்ளது என்றும் ஆக ஒரு சொத்தின் அனைத்து விவரங்களும் சிட்டாவில் இருக்கும்.
இப்படிப்பட்ட சிட்டா சரிபார்க்க வேண்டு-மென்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்ல வேண்டும். சொத்து வாங்குவதற்கு முன் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தால் மட்டுமே, வாங்கும் சொத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும், சொத்து வரி செலுத்தாமல் இருந்தால் அது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அவ்வாறு வாங்கும் சொத்தில் பிரச்சினைகள் பற்றி தெரிந்துகொண்டால் அதிலிருந்து சொத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டும். ஸீ