நூல்
நூல் : பாம்பின் கண்
தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
ஆசிரியர் : சு.தியோடர் பாஸ்கரன்
தமிழில் : லலிதானந்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை-_14
தொலைப்பேசி : 044_4200 9603
பக்கங்கள் : 280 விலை: ரூ.190.
பல்வகை நவீனத் தொழில்நுட்பங்களுடன் நாம் இன்று திரையரங்குகளில் அமர்ந்து பார்த்து ரசிக்கும் தமிழ்த் திரைப்படங்களின் தோற்றமும், படிப்படியாகப் பெற்ற வளர்ச்சி நிலையும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் பாதையை முடிவு செய்த முக்கியமான படங்கள், இயக்குநர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தேசியம், திராவிடம் போன்றன ஏற்படுத்திய தாக்கங்களை விளக்கி, தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முக்கியக் குறிப்புகளையும் தாங்கி நிற்பதே பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்.
தகவல் தளம்
சாதாரணமாகவும், தட்கல் முறையிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான படிவம், மறுபதிப்பு (ஸிமீவீமீ) செய்வதற்கான படிவம், சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தூதரக, விசா சேவைகள், இந்தியாவிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஏதேனும் தகவல் தேவையெனில் விசாரணைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல் மய்யங்கள் இடம் பெற்றுள்ளன.
விண்ணப்பித்தபின் நமது பாஸ்போர்ட் நிலவரத்தை www.passport.status என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
குறும்படம் – அறிவகம்
பள்ளிச் சீருடையில் புத்தகக் கடைக்குள் செல்லும் இரு மாணவர்கள் கடைக்காரரிடம் தயங்கித் தயங்கி அந்த மாதிரிப் புத்தகங்கள், அதான் பசங்க நைட் படிப்பாங்களே…… என்கின்றனர். குடோனில் இருக்கு, நாளை வாங்க எடுத்து வைக்கிறேன் என்று 3 நாள்கள் அலையவிடுகிறார் கடைக்காரர்.
இன்றாவது கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற மாணவர்களை அரை மணிநேரத்தில் வந்துடும் என்று சொல்லிக் காக்க வைக்கிறார். அப்போது பிச்சை கேட்டு சிறுவன் ஒருவன் வர, அவனுக்கு 10 ரூபாய் எடுத்துக் கொடுக்கிறார் கடைக்காரர். பிச்சைக்காரனுக்கு 10 ரூபாயா என மாணவர்கள் வியந்து கேட்கின்றனர். கடைக்காரர் சொன்ன பதில் என்ன? மாணவர்கள் புத்தகத்தை வாங்கிச் சென்றார்களா என்பதைக் குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.