கடந்த 2012 ல் மாயன் நாட்காட்டி என்று கதைவிட்டு உலகம் அழியுது… அழியுது…எனக் கூச்சல் போட்டு அது பொய்யாய்ப் போனது. இந்த ஆண்டு பிறந்த சில நாட்களிலேயே அடுத்த பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் .இது கிளம்பியிருப்பது மேற்கத்திய நாடுகளிலிருந்து. அங்குதான் 13 ஆம் எண் குறித்த மூடநம்பிக்கைகள் அதிகம் அல்லவா! 2013-என்ற எண்களில் 13 என்ற எண் இருக்கிறதாம்.அது ஆபத்தாம்.அதனால்,உலகில் பல அழிவுகள் ஏற்படுமாம், 13 எண் வீடு, 13-ஆம் மாடி, 13 தேதி,13 டாலர்கள் மிச்சம் கொடுக்கக் அஞ்சுதல் என மூடத்தன்ங்கள் அங்கு அதிகம். இந்த 13 எண் மீதான அச்சம் பைபிளின் யூதாஸ் கதையில் தொடங்கியது.1813 ஆண்டு நெப்போலியன் போனாபார்டின் கொடுங்கோல் போரால் அழிவு என்றும் 1613-ல் சேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் தீக்கிரையானது எனப் பல கதைகள் கட்டப்படுகின்றன.போரும்,தீ விபத்துகளும் பல நூறு ஆண்டுகளில் உண்டு.அது இயல்புதான்.போர்கள் கூட உலகின் ஏதாவது ஒரு பகுதியில் எப்போதுமே நடந்துகொண்டு தானிருக்கிறது. இந்த ஆண்டு முழுதும் அழிவு அழிவு என்று அச்சுறுத்த கண்டு பிடித்து விட்டார்கள் 13 அய்.ஆமா…எனக்கொரு கேள்வி. ஏம்ப்பா… இந்த 2013 வரப்போறது போன வருசமே தெரியுமே அப்பவே சொல்லியிருக்கலாமே…?ஏம்ப்பா சொல்லல..?