குஜராத்துக்கும் இமாச்சலப் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வந்தன. பத்திரிகைகள்(இங்கிலீஷ்,தமிழ் எல்லோரும்தான்) குஜராத் மோடி பற்றி முன் பக்கமும்,இமாச்சல் வீரபத்ர சிங் பற்றி உள் பக்கங்களிலும் செய்தியை வெளியிட்டன.
இமாச்சலில் வீரபத்ர சிங் வெற்றி;காங்கிரஸ் தோல்வி என்று தலைப்பிட்ட இந்தியா டுடே, மோடி மீண்டும் வெற்றி என்பதோடு நிறுத்திக் கொண்டது; பா.ஜ.க.தோல்வி என்று எழுத மனம் வரவில்லை.
டெல்லியில் நிகழ்ந்த பாலியல் வன்முறை பற்றி தினமணியில் மதி என்பாரின் கார்ட்டூன் ஒன்று.அதில்,அரசியல் கொலைகளைப் பற்றிப் பட்டியலிட்டுள்ளார்.இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது டெல்லியில் சீக்கியர்களைக் கொன்றது பற்றிக் குறிப்பிட்டவர், பாபர் மசூதி இடிப்பு,குஜராத் கலவரம், குஜராத் பெஸ்ட் பேக்கரி எரிப்பு, மும்பைக் கலவரம்,கோத்ரா சம்பவம், ராம ஜென்ம பூமிக்காக அத்வானியின் ரத்த யாத்திரை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது இந்துத்துவாக்கள் கொல்லப்பட்ட சிறுபான்மையினர் பற்றி ஒற்றைவரிகூட குறிப்பிடவில்லை.
ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமாக கலைஞரைச் சந்தித்த செய்தியை இட்டுக்கட்டி எழுதிய ஜீனியர் விகடன்,டெல்லியில் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் உள்ளே நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட 10 நிமிடம் பேசிவிட்டு,(அதுவும் தான் சென்னைக்குச் செல்லவேண்டும் என்று சிறப்பு அனுமதி கேட்டு,பிரதமரால் பெருந்தன்மை யோடு அனுமதியில் பேசி) வெளியே வந்து பத்திரிகைகளிடம் வெளிநடப்பு செய்ததாகச் சொல்லிய முதலமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து `தி ரிபல் லேடிஎன்று தலைப்பிட்டுள்ளது.
இதற்குப் பெயர்தான் பத்திரிகா தர்மாம்… புடலங்காயாம்.