மானத்தைத் தொலைத்த
தமிழ்ச் சமுதாயத்திற்கு – -அதை
மீட்டுத் தந்த மாவீரர்
எங்கள் பெரியார்…
கடந்த நூற்றாண்டோடு
சமாதி கட்டப்படவிருந்த -– இந்த
இனத்தையும், மொழியையும்
அடுத்த நூற்றாண்டின் கைகளில்
கொண்டுசேர்த்த சுமைதாங்கி
எங்கள் பெரியார்…
பதவிக்காக
கொள்கையில் சமரசம் ஆகாதென
நாற்காலி மீது
நாட்டமில்லாத நாத்திகர்
எங்கள் பெரியார்…
பல நூற்றாண்டாய்
கூன்விழுந்து கிடந்த தமிழனை
வான் நிமிர்த்திய வல்லவர்
எங்கள் பெரியார்…
ஆரிய ஆதிக்கத்தை
வெங்காய வெடிகுண்டு வீசியே
விரட்டியடித்த போராளி
எங்கள் பெரியார்….
நம் கரும்படை போரில்
பெண்அடிமை ஒழித்து
ஆதிக்கக் குரல்வளையை நெரித்து
அய்யாவின் கைத்தடியால்
ஜாதிகளின் கதைகளை முடித்து
போலிகளின், மதக் கிருமிகளின்
கால்தடம் வரை அழித்து
வெற்றி விடியல் கண்டு
பெரியாரின் வேதனைத் தீயை
அணைப்போம்….
இப்பணி முடித்தே
திராவிடம் பசியாறும்!
அய்யா சினம் தணித்தே
இப்படை இளைப்பாறும்!