கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில்,
“இனி அவர் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி;
நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால்,
அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் படம் போடாவிட்டால்,
அச்சரித்திரமே தீண்டத் தகாததாகிவிடும்’’ என்று எழுதினார்.
இதைவிட கலைவாணருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?