இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி.யின் தியாகத்திற்கு இணையாக தராசுத் தட்டில் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொருவர் இல்லை. வ.உ.சி. அவர்கள் தந்தை பெரியாரிடத்திலும், சுயமரியாதை இயக்கத்தினரிடமும் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். தநதை பெரியாருடன் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தமிழ் இலக்கிய உலகிற்கும் தமது பங்களிப்பை வழங்கிடத் தவறவில்லை.
