இது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது – கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை செய்து எழுதியிருக்கின்றனரா? நான் கடுமையான வார்த்தைகள் சொல்பவன் அல்ல. அது நமக்குத் தேவையும் அல்ல. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி அவரவர்கள் குடிவந்து விட்டார்கள். அதுவே இந்த அம்மாவுக்குத் தெரியவில்லை.
வீட்டு வசதி சாத்தியம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. எங்கே பார்த்தாலும் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
ஒரு தெளிவு இருக்க வேண் டாமா? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைப்பதா? மக்களை எப்படி எடை போடு கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
எனவே, இது அந்த அம்மாவின் அறியாமையைக் காட்டுகிறது. வாக்காளர்களை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பதைப் பற்றி பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கம். கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறையில் இருப்பதாலும், மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நவீன பசுமைத் திட்டத்தை ஏற்படுத்தும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. நவீன பசுமை வீட்டுத் திட்டத்தில் எப்பொழுதும் காய்கறிகள் எல்லாம் மேலேயே தொங்கும். முருங்கைக்கீரை, முளைக்கீரை எல்லாம் பக்கத்திலேயே குடி இருக்கும்.
நவீன பசுமை வசதித் திட்டம். அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரியசக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையிலே அம்மையார் சொல்லி யிருக்கிறார்.
பாவம், ஒன்று தெரிந்து கொள் ளுங்கள் – இந்த அம்மாவுக்கு மேல் உதிப்பது சூரிய வெளிச்சம் தான். (கைதட்டல்). சூரிய வெளிச்சத்தை ஜெயலலிதா வால் கூடத் தடுக்க முடியாது.
கலைஞர் கட்டிய வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வருகிறதோ இல்லையோ, இந்த அம்மா கட்டுகிற வீட்டில் சூரிய வெளிச்சம் வரும் என்றால் இந்த அம்மையார் தன்னுடைய தோல்வியைப் பெருமனதோடு ஒப்புக் கொண்டுவிட்டார்; ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்
எழுதிக் கொடுத்தவன் இஷ்டத் திற்கு எழுதிக் கொடுத்துவிட்டான். இந்த அம்மா அதைப் பார்க்கவில்லை. சூரியன் என்றாலே இந்த அம்மாவுக்கு அலர்ஜி ஆச்சே. என்னய்யா யாரோ தி.மு.க. காரன் நமது கட்சிக்குள்ளேயே புகுந்திருக்கிறான் என்று நினைக்கும்.
இந்த அம்மா சூரிய வெளிச்சம் – சூரிய மின்சார சக்தியைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது? எனவே, வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர்களை நம்புவார்களா? கட்டப் போகிறோம் என்று சொல்கிறவர்களை நம்புவார்களா? நினைத்துப் பார்க்க வேண்டும்.