குறும்படம்
தொடக்கமே கதையின் போக்கை நமக்கு ஓரளவிற்கு கோடி காட்டி விடுகிறது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அதற்கு எதிரில் உள்ள கூவம் நதியின் பாலத்திலிருந்து போக்குவரத்து நெரிசலோடு காட்டுகிற கேமரா மெதுவாக நதியின் ஓரத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்கு நகர்கிறது. அங்கிருந்து ஒரு சிறுவன், சிறுமி இருவரும் தாங்கள் ஏன் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை? இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இருவரும் பேசிக்கொண்டே வருகின்றனர். அவர்களது பேச்சில் பகுத்தறிவு எதார்த்தமாக தெரித்து விழுகிறது. தொடர்ந்து கொளுத்துகிற வெய்யிலில் கார் கண்ணாடியை துடைக்கும் பொருள்களை சிக்னலில் நிற்கும் வண்டியோட்டி களிடம் சென்று விற்பனை செய்ய முயலுகின்றனர். இறுதியில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம் என்கின்ற அறிவிப்பு பலகையிலிருந்து கேமரா கீழே இறங்குகிறது. கீழே அந்த சிறுவன் விற்ற பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான்.
இத்தோடு குறும்படம் நிறைவு பெறுகிறது. ஆனால், குறும்படம் ஏற்படுத்திய தாக்கம் நம்முள் எண்ண அலைகளை எழுப்பி விடுகிறது-
இயக்குநர்: த. மணிமாறன்
தொடர்பு எண்: 97101 20517
கணினிகளைப் பாதிக்கும் வைரஸ்களைத் தெரிந்து கொள்வதோடு கணினிகளை வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் தெளிவுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
கணினி மென்பொருளினைச் செயல் இழக்கச் செய்யும் ஒரு புரோகிராம்தான் வைரஸ் என்ற விளக்கம் கொடுத்து, வைரஸ்கள் உருவாக்கப்படும் விதம், பரவும் விதம், வைரஸ்களின் வகைகள், அவை கணினிகளைச் செயல் இழக்கச் செய்யும் தன்மை ஆகியன எளிய முறையில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
பயனுள்ள இணையங்கள் பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கணினித் துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, கணினி பயன்படுத்துவோர் அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நூலே கம்ப்யூட்டர் வைரஸ்.
ஆசிரியர்: மா.ஆண்டோ பீட்டர்
வெளியீடு: சாஃப்ட்வியூ பதிப்பகம்,
118, நெல்சன் மாணிக்கம் சாலை,
அமைந்தகரை, சென்னை – 29.
தொலைப்பேசி: 044 – 2374 1053
மொத்தப் பக்கங்கள்: 80, விலை ரூ.60/-
தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து நிரந்தரமாக பதிவுசெய்துகொள்ளும் இணைய முகவரிகள்:
www.tnpsc.gov.in
www.tnpscexams.net