நேருவின் காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையைக் கொடுப்பது பற்றிய பேச்சு அடிபட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தின் ஒரு பகுதி அது. அது நிறைவேறவில்லை என்றாலும் அந்தப் பேச்சு ஏடுகளில் வந்திருக்கிறது. அப்போது சங்கராச்சாரியார் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிற எசையனூர் எனும் ஊரில் இருக்கிறார்.
சங்கராச்சாரியார் என்றால் இறந்துபோன அந்தப் பெரியவர் (சந்திரசேகரேந்திரர்). அவர் தாத்தாச்சாரியாரைப் பார்த்து, “லோகமே அழியப்போறது ஓய்! பொம்மநாட்டிகளுக்கெல்லாம் சொத்துக்
கொடுக்கப் போறாங்களாம். ஸ்ரீகளுக்கு சொத்துக் கொடுத்தா என்னவாகும்?
அவாஅவா அவாளுக்கு இஷ்டப்பட்டவா கூட ஓடிப்போயிடுவா’’ என்று சொல்லி
யிருக்கிறார். ‘‘பெண்ணுக்கு எந்தச் சொத்துரிமையும் இருக்கக்கூடாது; எந்த சம்பாத்தியமும் இருக்கக்கூடாது என்று ஸ்மிருதி சொல்லுகிறது’’ என்றும் கூறியிருக்கிறார்.
ஆதாரம்: ஹக்னிகோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
இந்துமதம் எங்கே போகிறது? பக்கம் – 110
பெண்களை இழிவுபடுத்தும் சனாதனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா?