‘‘முதுநிலைத் தேர்வுக்காக முயன்று படித்து வந்தேன். தேர்வுக்குக் கட்டணம் செலுத்தப் புறப்பட்ட நேரம் இராகு காலமாக இருந்தது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்து புறப்படும்போது முடிதிருத்தும் தொழிலாளி எதிரே வந்தார். அப்போது உறவினர் ஒருவர், ‘‘சகுனம் சரியில்லை தம்பி! மேலும் இப்போது இராகு காலம் வேறு. அது கழிந்த பின் புறப்படு’’ என்றார். “எனது முயற்சியில் குறையில்லை என்றால் நான் தேர்ச்சி பெறுவது உறுதி. அப்படி நான் தேர்ச்சி பெறாமல் போனால் அது என் குறையே. அதற்கு மற்றவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்’’ என்று கூறி தேர்வுக் கட்டணத்தை உரிய இடத்தில் செலுத்தினேன். அந்தத் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.’’