Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவு நாள் 16.3.1974

தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் சமூக சீர்திருத்தக் கோட்பாடு
களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நேசிக்கப்பட்டவர். “குடிஅரசு’’ ஏட்டினை மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பரப்பியவர், சுயமரியாதை கொள்கை வழிப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மலாயா மண்ணிலும், சிங்கப்பூரிலும் தோன்றிடவும் மிகவும் கடுமையாக உழைத்தவர் ஆவார். தமிழர் சீர்திருத்த சங்கத்தை தோற்றுவித்தவர். தமிழ்த் தொண்டின் தனிக்கனியான தமிழவேள் என்றென்றும் தமிழர்தம் உள்ளங்களில் வாழும் ஏந்தல் ஆவர். 16.3.1974 அதிகாலை 4:00 மணிக்கு சிங்கப்பூரில்71ஆம் வயதில் தமிழவேள் காலமானார்.