Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீது அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். காவிகள்

உத்தரப்பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பற்றிச் சில தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் சில குழுக்கள் திட்டமிட்டே பரப்பிக்கொண்டிருக்கின்றன. பாருங்கள், மதச்சார்பற்ற நாட்டில் முஸ்லிம் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால், அவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பற்றிப் பேசுவதில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர்களுக்கென்று தனி இடஒதுக்கீடு தரப்படுகிறது என்று சொல்வதும் தவறான செய்தி. அப்படி எந்த ஒரு தனி இடஒதுக்கீடும் அங்கு இல்லை.

அதைத் தாண்டி அங்கே இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கு அரசு வகுத்திருக்கிற அந்த இட ஒதுக்கீட்டை மிகச் சரியாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அங்கே எல்லோரும் சேர்ந்துதான் படிக்கிறார்கள். உலகத்திலிருக்கிற பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழகங்களில் 287ஆம் இடத்தில் அது இருக்கிறது UPSC. IAS ஆகிய தேர்வுகளிலும் அங்கு படிக்கிற மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

எனவே, ஒரு பல்கலைக்கழகத்தை மத வெறிகொண்டு தாக்குவது நியாயமில்லை.